பதிவு செய்த நாள்
29 ஜூன்2016
07:32
புதுடில்லி : டாடாகிளிக் டாட் காம், உலகின் முன்னணி, 12 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. டாடா குழுமத்தைச் சேர்ந்த டாடாகிளிக் டாட் காம் நிறுவனம், இணையதள வணிகத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், அதன் விற்பனையை அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. இதற்காக, உலகின் முன்னணியில் உள்ள நியூ லுக், ஒயாசிஸ், லிப்சி லண்டன், பேஸ் எய்ட் உள்ளிட்ட, 12 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த நிறுவனம், மேலும், பல முன்னணி நிறுவனங்கள் உடன் ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, டாடாகிளிக் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:இந்திய வாடிக்கையாளர்கள், சர்வதேச நிறுவனங்களின் தயாரிப்புகளை விரும்புகின்றனர். ஆனால், அவர்களுக்கு, அந்த பொருட்கள் கிடைப்பதில்லை. இதனால், சர்வதேச நிறுவனங்களின் பொருட்கள், எங்கள் இணையதளத்தில் விற்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|