தமி­ழ­கத்தில் எண்ணெய் வள ஆய்வு: ரிலை­யன்­சுக்கு அனு­மதிதமி­ழ­கத்தில் எண்ணெய் வள ஆய்வு: ரிலை­யன்­சுக்கு அனு­மதி ... தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரிப்பு தங்கம் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரிப்பு ...
அடுத்த 5 ஆண்­டு­களில் இயந்­தி­ர­ம­ய­மாகும் இந்­திய ஐ.டி., துறை; 6.40 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 ஜூலை
2016
05:06

மும்பை : ‘இந்­திய ஐ.டி., துறை வேக­மாக இயந்­தி­ர­ம­ய­மாகி வரு­வதால், அதிக திறன் தேவை­யற்ற அடித்­தட்டு பணி­களில், அடுத்த ஐந்து ஆண்­டு­களில், 6.4 லட்சம் பேர் வேலை இழக்க நேரிடும்’ என, அமெ­ரிக்­காவைச் சேர்ந்த, ஆய்வு நிறு­வ­ன­மான எச்.எப்.எஸ்., தெரி­வித்­துள்­ளது.
ஐ.டி., எனப்­படும் தகவல் தொழில்­நுட்பத் துறை, கணினி சார்ந்த செயல்­பா­டு­களை கொண்­டுள்­ளது. இதில், ‘ஹார்­டுவேர்’ எனப்­படும், சாத­னங்கள், உதி­ரி­பா­கங்கள் உள்­ளிட்­ட­வற்றின் தயா­ரிப்பில், ‘ரோபோ’ எனப்­படும், இயந்­தி­ரங்­களை ஈடு­ப­டுத்­து­வது அதி­க­ரித்து வரு­கி­றது. இதனால், ‘அசெம்­பிளிங்’ போன்ற, உதி­ரி­பா­கங்­களை ஒன்­றி­ணைப்­பதில், மனி­தர்­களின் பங்­க­ளிப்பு, குறைந்து வரு­கி­றது. இந்­நி­லையில், அதிக திறன் தேவைப்­ப­டாத தொழில்­களும், வேக­மாக இயந்­தி­ர­ம­ய­மாகி வரு­வ­தாக, எச்.எப்.எஸ்., ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்: வரும், 2021ல், ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., எனப்­படும் பணி­களை பிற­ரிடம் ஒப்­ப­டைத்து பெற்றுக் கொள்ளும் தொழிலில், இயந்­தி­ரங்­களின் பங்கு அதி­க­ரிக்கும். இதனால், ஐ.டி., துறையில், அடிப்­படை கல்­வி­ய­றி­வுடன், அதிக திறன் தேவை­யற்ற பிரி­வு­களில், 6.40 லட்சம் பேர் வேலை இழப்பர். சர்­வ­தேச அளவில், ஐ.டி., துறை வேலை­வாய்ப்பு, 9 சத­வீதம் குறையும். 14 லட்சம் பேரின் பணி பறிபோகும். இதில், அமெ­ரிக்கா, பிரிட்டன், பிலிப்பைன்ஸ் உள்­ளிட்ட நாடு­களும் விதி­வி­லக்­கல்ல. ஐ.டி., மற்றும் பி.பி.ஓ., துறை­களில், 37 லட்சம் பேர் பணி­பு­ரி­கின்­றனர். இதில், பி.பி.ஓ., மற்றும் அடிப்­படை கட்­ட­மைப்பு பிரி­வுதான் அதிகம் பாதிக்­கப்­படும். குறை­வான திறன் தேவைப்­படும் பணி­களில், 30 சத­வீ­தத்தை, இயந்­தி­ரங்கள் எடுத்துக் கொள்ளும்.
ஒரே வகை­யான செயல்­பா­டு­களை, திரும்பத் திரும்ப செய்யும் பணிகள்; அதிக கல்­வி­ய­றிவு தேவைப்­ப­டாத வேலைகள் ஆகி­யவை, இப்­பி­ரிவில் அடங்கும். இதில், ‘ஆர்­டி­பி­ஷியல் இன்­டெ­லிஜன்ஸ்’ எனப்­படும், செயற்கை நுண்­ண­றி­வுடன் செயல்­படும் இயந்­தி­ரங்கள் தான், வேலையை பறிக்கக் கூடி­ய­வை­யாக இருக்கும். இது, ‘கால்­சென்டர்’ போன்ற, அழைப்பு மையப் பணி­களில், தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.
அதே­ச­மயம், இதே­கா­லத்தில், நடுத்­த­ர­மான ஆற்றல் தேவைப்­படும் பணி­களில், வேலை­வாய்ப்பு, 8 சத­வீதம் அதி­க­ரிக்கும். இப்­ப­ணி­களில், சவால்­க­ளுக்கு தீர்வு காண்­பதில், மனி­தர்­களின் ஒத்­து­ழைப்பு தேவைப்­படும். அதிக திறன் தேவைப்­படும் பணி­களில், வேலை­வாய்ப்பு, 56 சத­வீதம் உயரும். இதில், கருத்­து­ரு­வாக்கம், பிரச்­னைக்கு தீர்வு காண்­பது, ஆய்வு செய்­வது உள்­ளிட்ட பல்­வேறு பணி­க­ளுக்கு, இயந்­தி­ரங்­களை விட, மனித மூளை மிகவும் அவ­சியம்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
‘இப்­போதே கூற முடி­யாது’மனி­தர்கள் செய்யும் தொழில்கள், இயந்­தி­ர­ம­ய­மா­வதும், ‘ரோபோ’ எனப்­படும், இயந்­திர மனி­தர்கள் எத்­த­கைய தாக்­கத்தை ஏற்­ப­டுத்­துவர் என்­ப­தையும், தற்­போ­தைய சூழலில் கணிப்­பது கடினம். தொழில்கள் இயந்­தி­ர­ம­ய­மா­வதால், ஓர­ள­விற்கே பாதிப்பு இருக்கும். அதே­ச­மயம், புதிய தொழில்­நுட்­பங்­களின் அறி­முகம், பயன்­பாடு போன்­ற­வற்றால், அனைத்து துறை­க­ளிலும் வேலை வாய்ப்பு பெருகும். சங்­கீதா குப்தா, மூத்த துணை தலைவர், ‘நாஸ்காம்’

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)