முடங்­கிய திட்­டங்­களால் சுணங்­கிய முத­லீ­டுகள்முடங்­கிய திட்­டங்­களால் சுணங்­கிய முத­லீ­டுகள் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.67.47 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : ரூ.67.47 ...
ஆர்.டி.ஓ., பணி சுமையை குறைக்க வாக­னங்­களை பதிவு செய்ய முக­வர்­க­ளுக்கு அனு­மதி; மத்­திய அர­சுக்கு அமைச்­ச­ர­வை குழு பரிந்­துரை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2016
04:43

புது­டில்லி : ‘வாக­னங்­களை பதிவு செய்யும் பணியை, ‘ஆர்.டி.ஓ.,’ எனப்­படும் வட்­டார போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கத்­திடம் இருந்து, வாகன விற்­பனை முக­வர்­க­ளுக்கு மாற்­றலாம்’ என, சாலை போக்­கு­வ­ரத்து தொடர்­பான அமைச்­ச­ர­வைக்­குழு, மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்­துள்­ளது.
ராஜஸ்தான் போக்­கு­வ­ரத்து துறை அமைச்சர் யூனுஸ்கான் தலை­மையில் அமைக்­கப்­பட்ட குழு, சாலை போக்­கு­வ­ரத்து துறையில் செய்ய வேண்­டிய சீர்­தி­ருத்­தங்கள் குறித்து, 34 பரிந்­து­ரை­களை, மத்­திய சாலை போக்­கு­ வ­ரத்து மற்றும் நெடுஞ்­சாலை துறை­யிடம் வழங்­கி­யுள்­ளது.
அதன் விபரம்:வாகனப் பதிவை, தற்­போது, வட்­டார போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கங்கள் மேற்­கொள்­கின்­றன. பதி­வுக்­காக வரும் வாக­னங்கள் எண்­ணிக்கை, கிடு கிடு­வென உயர்ந்து வரு­கி­றது. அதை சமா­ளிக்­கக்­கூ­டிய அள­விற்கு, போதிய, பணி­யா­ளர்கள் இல்­லாமல், வட்­டார போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கங்கள் திண­று­கின்­றன. இது, லஞ்ச ஊழ­லுக்கு வழி வகுக்­கி­றது.
பழைய வாக­னங்கள் விற்­ப­னையில், உரிமை மாற்றம் கோரும் விண்­ணப்­பங்­க­ளையும், ஆர்.டி.ஓ., அலு­வ­லகம் பரி­சீ­லிக்­கி­றது.புதிய வாக­னங்­களை விட, மூன்று மடங்கு அதி­க­மாக, பழைய வாக­னங்­களின் உரி­மையை மாற்­று­வ­தற்கு விண்­ணப்­பங்கள் வரு­வதால், ஆர்.டி.ஓ., பணிச்­சுமை மேலும் அதி­க­ரித்­துள்­ளது.அதனால், புதிய வாக­னங்­களை பதிவு செய்யும் உரி­மையை, விற்­பனை முக­வர்­க­ளி­டமே வழங்­கலாம். அவர்கள், வாகன விற்­ப­னையில், உரி­மை­யா­ளரின் முழு விவ­ரங்­க­ளையும் கையாள்­வதால், பதிவு செய்யும் பணியை சுல­ப­மாக மேற்­கொள்ள முடியும். இதனால், ஆர்.டி.ஓ., பணிச்­சு­மையும் குறையும்.
தற்­போது, 18 வயது பூர்த்­தி­யானோர் மட்­டுமே, ஓட்­டுனர் உரி­மத்­துக்கு விண்­ணப்­பிக்க முடியும். இதை, 16 வய­தாக குறைத்து, 100 சி.சி., திறன் கொண்ட, ‘கியர்’ இல்­லாத வண்­டி­களை மட்டும் ஓட்ட அனு­ம­திக்­கலாம். பயிற்சி ஓட்­டுனர் விண்­ணப்­பத்தை, வலை­த­ளத்தில் வெளி­யிட்டு, அதன் வாயி­லா­கவே விண்­ணப்­பிக்­கவும், பயிற்சி ஓட்­டுனர் உரிமம் பெறவும், நட­வ­டிக்கை எடுக்க வேண்டும்.இரண்­டா­வது முறை­யாக, வாக­னங்­களை மிக வேக­மாக ஓட்­டினால், வசூ­லிக்கும் அப­ரா­தத்தை, இரண்­டா­யி­ரத்தில் இருந்து, 10 ஆயிரம் ரூபா­யாக உயர்த்த வேண்டும். குடித்­து­விட்டு கார் ஓட்­டு­ப­வர்­க­ளுக்கு, ஆறு மாதம் சிறை தண்­ட­னையும், 5,000 ரூபாய் அப­ரா­தமும் விதிக்க வேண்டும். ஓட்­டுனர் உரி­மத்தை, இரண்டு ஆண்­டு­க­ளுக்கு ரத்து செய்ய வேண்டும்.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.
கடந்த, 2015 –16ம் நிதி­ஆண்டில், 2.05 கோடி வாக­னங்கள் விற்­ப­னை­யா­கி­ உள்­ளன. அவற்றில், 1.65 கோடி இரு சக்­கர வாக­னங்கள்; 27.80 லட்சம் பய­ணிகள் வாக­னங்கள்; 13 லட்சம் இதர வாகனங்கள்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 08,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)