கோக­கோலா நிறு­வ­னத்தின் முதல் பெண் நிதி அதி­காரிகோக­கோலா நிறு­வ­னத்தின் முதல் பெண் நிதி அதி­காரி ... ஆர்.டி.ஓ., பணி சுமையை குறைக்க வாக­னங்­களை பதிவு செய்ய முக­வர்­க­ளுக்கு அனு­மதி; மத்­திய அர­சுக்கு அமைச்­ச­ர­வை குழு பரிந்­துரை ஆர்.டி.ஓ., பணி சுமையை குறைக்க வாக­னங்­களை பதிவு செய்ய முக­வர்­க­ளுக்கு ... ...
முடங்­கிய திட்­டங்­களால் சுணங்­கிய முத­லீ­டுகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2016
04:42

புது­டில்லி : ‘முடங்­கி­யுள்ள பல திட்­டங்கள் இன்னும் உயிர் பெறா­ததால், இந்­தி­யாவில் கடந்த, ஏப்., – ஜூன் வரை­யி­லான காலாண்டில் புதிய முத­லீ­டுகள் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை’ என, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விபரம்:நிதி நெருக்­கடி, தேவைப்­பாடு குறைந்­தது, தனியார் துறை­யி­னரின் கடன் அதி­க­ரிப்பு போன்­றவை, இந்­தி­யாவில் புதிய முத­லீ­டு­க­ளுக்கு தடைக் கற்­க­ளாக உள்­ளன. மதிப்­பீட்டு காலாண்டில், ஏற்­க­னவே செயல்­பாட்டில் உள்ள திட்டப் பணி­க­ளிலும் தொய்வு ஏற்­பட்­டுள்­ளது. முடங்­கி­யுள்ள திட்­டங்கள் அதி­க­ரிக்­க­வில்லை என்ற போதிலும், அவற்றின் மதிப்பு, முன்­னெப்­போதும் இல்­லாத அள­விற்கு உயர்ந்­துள்­ளது. அறி­விக்­கப்­பட்ட புதிய திட்­டங்­களும், கடந்த, 2006 – 11ம் நிதி­யாண்­டு­களில், இதே மதிப்­பீட்டு காலத்தில் அறி­விக்­கப்­பட்ட திட்­டங்­களில், சரா­ச­ரி­யாக, நான்கில் ஒரு பங்கு என்ற அள­விற்கே உள்­ளன.
கடந்த ஒன்­றரை ஆண்­டு­களில், வங்கி கட­னுக்­கான வட்டி விகிதம் குறைந்­துள்­ளது, பண­வீக்கம், ரூபாய் மதிப்பு ஓர­ளவு கட்­டுக்குள் உள்­ளது. திட்­டங்­க­ளுக்கு வேக­மாக அனு­மதி தரப்­ப­டு­கி­றது. இருந்­த­போ­திலும், தனியார் துறை முத­லீ­டு­களில் வளர்ச்சி இல்­லாத நிலை காணப்­ப­டு­கி­றது. கடந்த நிதி­யாண்டு மற்றும் நடப்பு நிதி­யாண்டில், பல்­வேறு திட்­டங்­க­ளுக்­கான அரசு முத­லீடு அதி­க­ரித்த போதிலும், அவற்றில் தனியார் துறை முத­லீடு அதி­க­ரிக்­க­வில்லை.முடங்­கி­யுள்ள திட்­டங்­களின் மதிப்பு, 11 லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில், மிகவும் அதி­க­மாக உள்­ளது. இதில், தனியார் துறையின் பங்கு, 75 சத­வீ­த­மாக உள்­ளது.
உரிய நேரத்தில் அனு­மதி கிடைக்­கா­மலும், மூலப் பொருட்கள் பற்­றாக்­கு­றை­யாலும், 42 சத­வீத திட்­டங்கள் முடங்­கி­யுள்­ளன. இதில், அதி­க­பட்­ச­மாக மின்­து­றையில், 31 சத­வீதம், உருக்கு துறையில், 25 சத­வீத திட்­டங்கள் அடங்கும். தற்­போ­தைய சூழலில், தனியார் துறையில் முத­லீ­டுகள் அதி­க­ரிக்க சில காலம் ஆகும் என, தெரி­கி­றது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)