10 ஆண்­டு­களில் சரிந்­தது எண்ணெய் வித்­துக்கள் உற்­பத்தி:உயர்ந்­தது சமையல் எண்ணெய் இறக்­கு­மதி 10 ஆண்­டு­களில் சரிந்­தது எண்ணெய் வித்­துக்கள் உற்­பத்தி:உயர்ந்­தது சமையல் ... ... கிரெடிட் கார்டு வழிகாட்டி கிரெடிட் கார்டு வழிகாட்டி ...
பங்குச் சந்தை முத­லீடு பலன் தரக்­கூ­டிய 4 துறைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2016
03:30

பங்குச் சந்­தையில் ஏற்ற இறக்­க­மான போக்கு நிலவும் சூழலில், பலன் தரக்­கூ­டிய பங்­கு­களை தேர்வு செய்ய கவனம் செலுத்த வேண்­டிய துறைகள் எவை?
கச்சா எண்ணெய் விலை போக்கு, சீன பொரு­ளா­தார நிலையின் பாதிப்பு, வட்டி விகித போக்கு உள்­ளிட்ட பல அம்­சங்கள் பங்குச் சந்­தையின் போக்கில், தாக்கம் செலுத்தி வந்த நிலையில், பிரெக்ஸிட் பிரச்னை உலக பொரு­ளா­தா­ரத்­திற்கு புதிய சவா­லாக உரு­வெ­டுத்­துள்­ளது. இவற்­றோடு உள்­நாட்டு அம்­சங்­களும் தாக்கம் செலுத்­து­வதால், இந்­திய பங்குச் சந்­தையில் எளிதில் கணிக்க முடி­யாத ஏற்ற இறக்­க­மான போக்கு நில­வு­வ­தாக பங்குச் சந்தை வல்­லு­னர்கள் கரு­து­கின்­றனர்.
இந்த பின்­ன­ணியில், குறிப்­பிட்ட காரணங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு, ஒரு சில துறை பங்­கு­களை தவிர்க்கும் போக்கும், முத­லீட்­டா­ளர்கள் மத்­தியில் நில­வு­கி­றது. உதா­ர­ண­மாக, பிப்­ர­வரி மாதத்தில், பெரும்­பா­லானோர் பொதுத்­துறை வங்கி பங்­கு­களை தவிர்த்து வந்­தனர். வங்­கி­களின் வாரா கடன் பிரச்னை பெரி­தாக பேசப்­பட்ட நிலையில், பொதுத்­துறை வங்கி பங்குகள் பாத­க­மாக கரு­தப்­பட்­டன. அப்­போது நிப்டி பி.எஸ்.யு., பாங்க் இன்டெக்ஸ் சரிந்து, 1,968 புள்­ளி­களை தொட்­டது. ஆனால், தற்­போது இந்த குறியீடு, 46 சத­வீதம் உயர்ந்து, 2,882 புள்ளி­க­ளாக இருக்­கி­றது. இந்த பங்­கு­களில் சிறந்த­வற்றை தேர்வு செய்­தி­ருந்தால், இப்­போது நல்ல பலனை பெற்­றி­ருக்­கலாம்.
இப்­படி பர­வ­லாக பின்­பற்­றப்­படும் போக்­கிற்கு மாறாக, நல்ல பங்­கு­களை கவ­ன­மாக தேர்வு செய்­தி­ருந்தால், நல்ல பலனை பெறலாம் என்­பதை பங்குச் சந்தை வல்­லு­னர்கள், ஒரு உத்­தி­யாக சுட்டிக் காட்­டு­கின்­றனர். இதன் அடிப்­ப­டையில், பர­வ­லாக நிலவும் போக்­கிற்கு எதி­ராக, நல்ல பங்­கு­களை கவ­ன­மாக தேர்வு செய்ய வாய்ப்­புள்ள நான்கு துறை­களை வல்­லு­னர்கள் ஆய்வின் அடிப்­ப­டையில், ‘பிஸ்னஸ் ஸ்டாண்டர்ட்’ நாளிதழ் அடை­யாளம் காட்­டி­யுள்­ளது:
மருந்­த­கத்­துறைகடந்த ஓராண்டில், இந்த துறையின் முன்­னணி நிறு­வ­னங்கள், சரிவை சந்­தித்­துஉள்­ளன. இந்த நிறு­வ­னங்­களின் தரக்­கட்டுப்­பாடு தொடர்­பாக, அமெ­ரிக்க உணவு மற்றும் மருந்து கட்­டுப்­பாட்டுத் துறையின் எச்­ச­ரிக்கை கடி­தங்கள் மற்றும் இறக்­கு­மதி கட்­டுப்­பா­டுகள், பாதிப்பை உண்­டாக்­கின. எனினும் மருந்­தக துறைக்­கான வளர்ச்சி வாய்ப்­புகள், பிர­கா­ச­மாக இருப்­ப­தாக கருதப்­ப­டு­கி­றது. இந்த துறை, ரிஸ்­கிற்கு ஏற்ற லாபம் அளிக்க கூடி­ய­தாக இருக்­கி­றது.
தகவல் தொழில்­நுட்பம்இந்த துறையைச் சேர்ந்த நிறு­வன பங்குகள், சரிவை சந்­தித்து வரு­கின்றன. ஐரோப்­பிய ஒன்­றி­யத்தில் இருந்து வெளியேறும் பிரிட்­டனின் முடிவு மற்றும் ஐரோப்­பாவில் பொரு­ளா­தார மந்­த­நிலை ஆகி­ய­வற்றால், இத்­துறை நிறு­வ­னங்­களின் லாபம் பாதிக்­கப்­ப­டலாம் எனும் கருத்து நில­வு­கி­றது. மேலும், மாறி­வரும் தொழில்­நுட்பத்திற்கு ஈடு கொடுக்க முடி­யாமல், பல நிறு­வ­னங்கள் தடு­மா­றலாம் என்றும் கரு­தப்­ப­டு­கி­றது. ஆனால் இந்த கவ­லைகள், மிகை­யா­னவை என்ற கருத்தும் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. கடந்த காலங்­க­ளிலும், தகவல் தொழில்­நுட்ப நிறு­வ­னங்கள் தொழில்­நுட்ப மாற்­றங்­களை, வெற்­றி­க­ர­மாக எதிர்­கொண்­டி­ருக்­கின்­றன.
டெலிகாம் இந்த துறையில், முத­லீட்­டா­ளர்­க­ளுக்கு பொறுமை அவ­சியம். நிறு­வ­னங்கள் பல பிரச்­னை­களை சந்­தித்து வரும் நிலையில், போட்டி அதி­க­ரிப்­பது லாப விகி­தத்தை பாதிக்கும் எனும் அச்சம் உள்­ளது. ஆனால், நீண்­ட­கால நோக்கில் பலன் தரக்­கூ­டிய பல சாத­க­மான அம்­சங்­க­ளையும், இத்­துறை கொண்­டி­ருக்­கி­றது. செயல்­திறன் வாய்ந்த நிறு­வ­னங்கள் தங்கள் நிலையை வலுப்­ப­டுத்திக் கொள்ளும்.
எரி­சக்திஎண்ணெய் அகழ்வு நிறு­வ­னங்கள், எண்ணெய் மார்க்­கெட்டிங் நிறு­வ­னங்கள் மற்றும் துணை நிறு­வ­னங்­களை கொண்ட பரந்து விரிந்த துறை இது. கச்சா எண்ணெய் விலை உயர்ந்தால், எண்ணெய் அகழ்வு நிறு­வன பங்­குகள் நல்ல பலனைத் தரலாம் என்­கி­றனர்.
கவனம் தேவைபர­வ­லாக பலரும் தவிர்க்கும் துறை பங்­கு­களை தேர்வு செய்­யும்­போது, கவ­ன­மாக இருப்­பதும் அவ­சியம் என்­கின்­றனர். பர­வ­லான முத­லீட்­டா­ளர்­களின் போக்­கிற்கு எதி­ரான தன்­மையை மட்டும் அடிப்­ப­டை­யாக கொள்­ளாமல், நிறு­வ­னங்­களின் சந்தை மதிப்பு, நிர்­வாக தரம், வளர்ச்சி வாய்ப்­புகள், பாலன்ஸ் ஷீட்டில் கடன் நில­வரம் உள்­ளிட்ட அம்­சங்­களை பரி­சீ­லித்து, அவற்றின் அடிப்­ப­டையில் நல்ல பங்­கு­களை தேர்வு செய்ய வேண்டும். மேலும், இந்த உத்­தி­யோடு குறிப்­பிட்ட துறையில் மட்டும், மிகை கவனம் செலுத்­து­வ­தையும் தவிர்க்க வேண்டும். பங்­குகள் முத­லீடு பர­வ­லாக இருக்க வேண்டும். குறிப்­பிட்ட துறையில், 20 சத­வீ­தத்­திற்கு மிகாமல் இருப்­பது நல்­லது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)