பதிவு செய்த நாள்
22 ஜூலை2016
15:35

புதுடில்லி : ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் லாபம் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த முதல் காலாண்டில் இரண்டு மடங்கு அதிகரித்தது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் வினோத் தாசரி கூறுகையில், நடப்பு நிதி ஆண்டின் முதல் காலாண்டில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் நிகர விற்பனை ரூ.4,175.79 கோடியாக இருந்தது. கடந்த நிதி ஆண்டின் இதே கால அளவில் மேற்கொள்ளப்பட்ட விற்பனையான ரூ.3,775.29 கோடியுடன் ஒப்பிடுகையில் இது 10.6 சதவீத வளர்ச்சியாகும்.நிகர லாபம் ரூ.144.49 கோடியிலிருந்து இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.290.78 கோடியாக இருந்தது. உள்நாட்டில் மோட்டார் வாகனத் துறையின் விற்பனை வளர்ச்சி 14.5 சதவீதம் என்றிருந்த நிலையில் அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை 18.5 சதவீதம் அதிகரித்துள்ளது. செயல்பாட்டுத் திறனை அதிகரித்தல், புதிய தயாரிப்புகளை உருவாக்கல், விநியோகத் தொடர்புகளை மேம்படுத்துதல் ஆகியவற்றில் அசோக் லேலண்ட் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது என தெரிவித்துள்ளார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|