வாகன துறையில் புதிய முத­லீ­டுகள் அடி­யோடு நிறுத்தம்வாகன துறையில் புதிய முத­லீ­டுகள் அடி­யோடு நிறுத்தம் ... தங்கம் விலை சவரனுக்கு ரூ. 48 குறைவு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 48 குறைவு ...
மின்­னணு வணிகம்: இந்­தி­யாவில் வேக­மாக பரவும் ‘டிஜிட்டல்’ புரட்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜூலை
2016
04:06

புது­டில்லி : ‘இந்­தி­யாவில், ‘டிஜிட்டல்’ எனப்­படும், மின்­னணு தொழில்­நுட்­பமும், அது சார்ந்த வர்த்­த­கமும் வேக­மாக பரவி வரு­வதால், அடுத்த, 10 ஆண்­டு­களில், மின்­னணு வணிகத் துறையில், 1.20 கோடி புதிய வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும்’ என, எச்.எஸ்.பி.சி., ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விபரம்: இந்­தி­யா­விற்கு, அடுத்த, 10 ஆண்­டு­களில், எட்டு கோடி புதிய வேலை­வாய்ப்­புகள் தேவைப்­படும். அதில், மின்­னணு வணிகம் குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்கும். சேவைகள் துறையில், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு, புதிய வேலை­வாய்ப்­பு­களை உரு­வாக்கும் தள­மாக, மின்­னணு வணிகம் உரு­வெ­டுத்­துள்­ளது. இத்­து­றையில், தற்­போது, 10 லட்­சத்­திற்கும் குறை­வான இந்­தி­யர்கள் பணி­யாற்­று­கின்­றனர். இது, வரும் ஆண்­டு­களில் மிக வேக­மாக அதி­க­ரிக்கும்.
எழுச்சி :இந்­தி­யாவில், இளம் வய­து­டை­யோரின் எண்­ணிக்கை அதி­க­மாக உள்­ளது. அவர்கள், ‘ஸ்மார்ட் போன்’ பயன்­ப­டுத்­து­வதும், ‘ஆன்லைன்’ மூலம் பொருட்கள் வாங்கி, அதே முறையில் பணம் செலுத்­து­வதும் அதி­க­ரித்து வரு­கி­றது.இத்­த­கைய, ‘டிஜிட்டல் பேமன்ட்’ புரட்சி, ஒட்­டு­மொத்த மின்­னணு வணி­கத்தின் மிக விரை­வான எழுச்­சிக்கு வித்­திடும். இதன் கார­ண­மாக, வரும் ஆண்­டு­களில், மொத்தம், இரண்டு கோடி வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும். அதில், 70 சத­வீதம், சரக்கு போக்­கு­வ­ரத்து மற்றும் சப்ளை பிரி­விலும், 30 சத­வீதம், தகவல் தொழில்­நுட்பம் மற்றும் நிர்­வாகப் பிரி­விலும் அடங்கும்.
பாரம்­ப­ரிய வணிகம் தவிர்த்து, நிகர அடிப்­ப­டையில், மின்­னணு வணிகத் துறையில், 1.20 கோடி புதிய வேலை­வாய்ப்­புகள் உரு­வாகும். சீனாவில், விவ­சா­யிகள், ‘தாபோ கிரா­மங்கள்’ எனப்­படும், டிஜிட்டல் கடை­களை நிறுவி, தங்கள் விளை­பொ­ருட்­களை விற்­பனை செய்யும் திட்டம் அறி­மு­க­மா­னதை அடுத்து, மின் வணிகம், கிரா­மப்­பு­றங்­க­ளிலும் வேக­மாக பர­வி­யது. அது­போன்ற புரட்சி, இந்­தி­யா­விலும் உரு­வாகும். அடுத்த, 10 ஆண்­டு­களில், 50 லட்­சத்­திற்கும் மேற்­பட்ட விவ­சாய வணி­கர்கள் மூலம், ஏரா­ள­மா­னோ­ருக்கு வேலை கிடைக்கும்.
அதிக அள­வி­லான தொழி­லா­ளர்கள் மூலம், மிகக் குறை­வான உற்­பத்­தியை மேற்­கொள்ளும் துறைகள் தான், இந்­தி­யாவில் பிர­தா­ன­மாக உள்­ளன. உதா­ர­ண­மாக, வேலை­வாய்ப்பில், 50 சத­வீத பங்­க­ளிப்பை வழங்கி வரும் வேளாண் துறையின் உற்­பத்தி மிகக் குறை­வா­கவே உள்­ளது. அதே­ச­மயம், நிதிச் சேவைகள் உள்­ளிட்ட பல துறைகள், குறைந்த வேலை­வாய்ப்பில், மிக அதி­க­மான உற்­பத்­தியை வழங்கக் கூடி­ய­வை­யாக உள்­ளன.
ஆற்றலும், திறனும் :இந்த இடை­வெளி கார­ண­மாக, இந்­தி­யாவின் ஒட்­டு­மொத்த தொழி­லா­ளர்கள் அடிப்­ப­டை­யி­லான உற்­பத்தி விகிதம், மிகக் குறை­வாக உள்­ளது. இது, மின்­னணு வணி­கத்தின் வளர்ச்­சியால், குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. மின்­னணு வணி­கத்தில் உரு­வாகும் வேலை­வாய்ப்­புகள், அதிக அளவில் உற்­பத்­தியை பெருக்கக் கூடி­ய­வை­யாக இருக்கும். இதற்கு, இந்­தி­யர்­க­ளிடம் உள்ள ஆற்­றலும், தொழில்­மு­னையும் திறனும் துணை புரியும். இவ்­வாறு அதில் கூறப்­பட்­டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஜூலை 29,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)