பதிவு செய்த நாள்
05 ஆக2016
00:19
புதுடில்லி : மத்திய வர்த்தக துறை கூடுதல் செயலர் அலோக் வி.சதுர்வேதி கூறியதாவது: சிறப்பு பொருளாதார மண்டலங்களில் அமைந்துள்ள நிறுவனங்கள், சில பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. குறிப்பாக, குறைந்தபட்ச மாற்று வரி, டிவிடெண்டு வினியோக வரி ஆகியவற்றை நீக்குமாறு, மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான குறைகளை தெரிவிக்கவும், அது தொடர்பாக எடுக்கப்படும் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளவும், பிரத்யேக வலைதள பிரிவை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. விரைவில், இப்பிரிவு துவக்கப்படும். இது, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் தொடர்பான பிரச்னைகளை, விரைந்து தீர்க்கும் தளமாக செயல்படும். சிறப்பு பொருளாதார மண்டலங்களை ஊக்கமளிக்க, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து, பல நிறுவனங்கள், இம்மண்டலங்களில் தொழில்களை துவக்கி வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|