தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.24 குறைவு ... வைர அகழ்வாராய்ச்சி செய்ய என்.எம்.டி.சி., நிறுவனத்துக்கு அனுமதி வைர அகழ்வாராய்ச்சி செய்ய என்.எம்.டி.சி., நிறுவனத்துக்கு அனுமதி ...
மத்திய அரசு ஓய்வூதியம் 157 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2016
12:31

புதுடில்லி:ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியம், 157 சதவீதம் உயர்த்தப்படுகிறது.மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும் ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரைகளை ஏற்று அதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள, 58 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கான ஓய்வூதியம் குறித்து மத்திய பணியாளர் நலத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:குறைந்தபட்ச ஓய்வூதியம், 3,500 ரூபாயிலிருந்து, 157.14 சதவீதம் உயர்த்தப்பட்டு, 9,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகபட்ச ஓய்வூதியம், 1.25 லட்சம் ரூபாய்:'கிராஜுவிட்டி' எனப்படும் பணிக்கொடைக்கான உச்சவரம்பு, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதுடி.ஏ., எனப்படும் அகவிலைப்படி, அடிப்படை சம்பளத்தைவிட, 50 சதவீதம் உயரும் போது பணிக்கொடைக்கான உச்ச வரம்பும், 25 சதவீதம் உயர்த்தப்படும்பணியின் போது உயிரிழக்கும் ராணுவம் மற்றும் மற்ற அரசு ஊழியர்களுக்கான இழப்பீட்டு தொகையும் உயர்த்தப்பட்டு உள்ளதுபணியின் போது விபத்து ஏற்பட்டு உயிரிழந்தாலோ, பயங்கரவாதிகள், சமூக விரோதிகளின் தாக்குதலில் உயிரிழந்தாலோ அளிக்கப்படும் இழப்பீட்டு தொகை, 10 லட்சம் ரூபாயிலிருந்து, 25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறதுஎல்லையில் நடக்கும் மோதல்கள், பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின் போது உயிரிழப்போர், இயற்கை சீற்றங்களால் உயிரிழப்போர் குடும்பத்துக்கான இழப்பீட்டு தொகை, 15 லட்சம் ரூபாயிலிருந்து, 35 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளதுபோரின் போது உயிரிழப்போருக்கான இழப்பீட்டு தொகை, 20 லட்சம் ரூபாயிலிருந்து, 45 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. மருத்துவ படிகள் உள்ளிட்ட சலுகைகள் குறித்து முடிவு செய்ய, பல்வேறு துறைகளின் செயலர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு பரிந்துரை அளிக்கும் வரை, தற்போதுள்ள முறையே தொடரும்.இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் ஆகஸ்ட் 08,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)