பதிவு செய்த நாள்
08 ஆக2016
14:23

வாஷிங்டன் : அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் உள்ள சேவியர் பல்கலை.,யில் நாட்டிலேயே முதல் முறையாக பீட்சா ஏடிஎம் அமைக்கப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் செயல்படும் வகையில் இந்த பீட்சா ஏடிஎம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பீட்சா சாப்பிட விரும்புவோர் இந்த ஏடிஎம் கருவியில் உள்ள டச் ஸ்கிரீனில் தாங்கள் விரும்பும் பீட்சா வகையை தேர்வு செய்து, அதற்கான கட்டணத்தை செலுத்தினால் 3 நிமிடத்தில் சுடச்சுட பீட்சா தயாராகி வந்து விடும். இந்த பீட்சா ஏடிஎம் இயந்திரத்தில் பீட்சாவிற்கு தேவையான பொருட்கள் கெட்டுப் போகாத வகையில் குளிர்பதனப்படுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
பீட்டா சாப்பிட விரும்புவோர், டச் ஸ்கிரீனில் தாங்கள் விரும்பும் பீட்சா வகையை தேர்வு செய்தவுடன் அந்த வகை பீட்சா உடனடியாக தயார் செய்யப்பட்டு, ஏடிம் இயந்திரத்தின் மற்றொரு பகுதியில் உள்ள ஓவனுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தேவையான அளவில் வடிவமைக்கப்பட்டு, சூடான பீட்சாவை 3 நிமிடத்தில் வெளியே தள்ளி விடும். ஒரு பீட்சாவின் விலை 10 அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பீட்சா ஏடிஎம் ஆகஸ்ட் 10 முதல் மாணவர்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது.
இந்த பீட்சா ஏடிஎம் பணமாக மட்டுமின்றி கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, ஸ்டூடன்ட்ஸ் கார்டு ஆகியவற்றையும் ஏற்றுக் கொள்ளும். இந்த ஏடிஎம் இயந்திரம் பிரெஞ்ச் நாட்டை சேர்ந்த பாலைன் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|