பதிவு செய்த நாள்
09 ஆக2016
05:08

சென்னை : ஹட்சன் அக்ரோ, 450 கோடி ரூபாய் செலவில், விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபடுவதற்கு முடிவு செய்து உள்ளது. சென்னையைச் சேர்ந்த ஹட்சன் அக்ரோ புராடக்ட், பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், அருண் என்ற பெயரில், ஐஸ்கிரீம் விற்பனை செய்கிறது. ஹட்சன் நிறுவனம், 450 கோடி ரூபாய் செலவில் விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட முடிவு செய்து உள்ளது. இதன் மூலம், தினமும், ஒரு லட்சம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் திறனை, 1.50 லட்சம் லிட்டராக அதிகரிக்க திட்டமிட்டு உள்ளது. புதிய மாடல்களில், 600 – 700 கடைகளை துவக்கவும் முடிவு செய்து உள்ளது. இதன்படி அடுத்த, 18 மாதங்களில், 450 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மொத்த மூலதன செலவில், 135 கோடி ரூபாய், ஐஸ்கிரீம் விற்பனையை அதிகரிக்கும் வகையில், ஆலை மற்றும் சந்தை விரிவாக்க பணிகளுக்கு செலவிட உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|