பதிவு செய்த நாள்
09 ஆக2016
11:42

மும்பை : ரிசர்வ் வங்கியின் நிதிகொள்கை தொடர்பான கூட்டம் கவர்னர் ரகுராம் ராஜன் தலைமையில் மும்பையில் நடந்தது. அதில் நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் வட்டி விகிதமே நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ரெப்போ வட்டி விகிதம் எனப்படும் குறுகியகால கடன்களுக்கான வட்டி விகிதம் 6.5 சதவீதத்திலேயே நீடிக்கிறது. சிஆர்ஆர் எனப்படும் ரொக்க கையிருப்பு விகிதமும் 4 சதவீதமே நீடிக்கிறது.
கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கவர்னர் ரகுராம் ராஜன்... ‛‛பணவீக்கம் கட்டுக்குள் வராததால் நிதிக்கொள்கையில் எந்த மாற்றமும் செய்யவில்லை. நாட்டின பொருளாதார வளர்ச்சி 7.6 சதவீதமாக இருக்கும். ஜிஎஸ்டி., மசோதா, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் என்றார்.
ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்ற கடைசி கூட்டத்தொடர் இது என்பது குறிப்பிடத்தக்கது. வருகிற செப்டம்பர் மாதத்துடன் இவர் ஓய்வு பெற உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|