பதிவு செய்த நாள்
27 ஆக2016
04:57

சென்னை : ஹூண்டாய் நிறுவனம், எஸ்.யூ.வி., மாடலில், புதிய கார்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டு உள்ளது.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கு, சென்னை அடுத்த ஸ்ரீபெரும்புதுாரில், கார் தயாரிப்பு தொழிற்சாலை உள்ளது.இங்கு உற்பத்தியாகும் கார், பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. நடப்பாண்டில், உள்நாட்டில், ஹூண்டாய், ஐந்து லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த நிலையில், அந்த நிறுவனம், எஸ்.யூ.வி., மாடலில், இரண்டு புதிய கார்களை அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, அந்த நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது:தற்போது, எஸ்.யூ.வி., மாடல் கார்களுக்கு அதிக தேவை ஏற்பட்டு வருகிறது. இதை கருத்தில் கொண்டு, எங்கள் நிறுவனம், அந்த மாடலில், இரண்டு கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. ஒரு கார், ‘டஸ்கான்’ என்ற பெயரில், இந்த ஆண்டு அக்., – நவ., மாதங்களில், அறிமுகம் செய்யப்படும். மற்றொரு கார், விரைவில் சந்தைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|