பதிவு செய்த நாள்
27 ஆக2016
04:58

மும்பை : டாடா சன்ஸ் நிறுவனத்தின் இயக்குனர் குழுவில், டி.வி.எஸ்., மோட்டார், சுந்தரம் கிளேட்டன் ஆகிய நிறுவனங்களின் தலைவர், வேணு சீனிவாசன் மற்றும் பிரமால், ஸ்ரீராம் குழுமங்களின் தலைவர் அஜய் பிரமால் ஆகியோர், செயல் சாரா இயக்குனர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.
வளர்ச்சி உதவும்சைரஸ் மிஸ்திரி தலைமையிலான டாடா சன்ஸ் குழுமத்தின் கீழ், அனைத்து டாடா நிறுவனங்களும் இயங்கி வருகின்றன. சமீப காலமாக, டாடா குழுமத்தைச் சேர்ந்த, பிரிட்டனின் டாடா ஸ்டீல், டாடா டெலிசர்வீசஸ் ஆகியவை நெருக்கடியை சந்தித்து வருகின்றன. இந்நிலையில், தொழில் துறையில் பழுத்த அனுபவம் உள்ள, வேணு சீனிவாசன், அஜய் பிரமால் ஆகியோர், டாடா சன்ஸ் இயக்குனர் குழுவில் இணைந்திருப்பது, பாரம்பரியமான டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு உதவும் என, எதிர்பார்க்கப்படுகிறது. வேணு சீனிவாசன் மனைவி மல்லிகா சீனிவாசன், டாடா ஸ்டீல், டாடா குளோபல் பிவரேஜஸ் ஆகிய நிறுவனங்களின் இயக்குனர் குழுவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு வாய்ப்பில்லைடி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், இரு சக்கர வாகனங்களையும், டாடா மோட்டார்ஸ், கார் மற்றும் கனரக வாகனங்களையும் தயாரித்து வருகின்றன. அதனால், வாகன துறையில் இந்நிறுவனங்களுக்கு இடையே போட்டிக்கு வாய்ப்பு இல்லை எனலாம். நிதிச் சேவையில், டாடா குழுமமும், அஜய் பிரமால் நிறுவனமும் ஈடுபட்டு வருகின்றன. எனவே, இந்நிறுவனங்களிடையே, வர்த்தக ரீதியிலான போட்டி நிலவுகிறது. இருந்தபோதிலும், அஜய் பிரமால், டாடா சன்ஸ் இயக்குனர் குழுவில் இணைக்கப்பட்டுள்ளது, இந்திய தொழில் துறை வட்டாரங்களில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|