1.82 கோடி ‘4ஜி’ ஸ்மார்ட் போன்கள் விற்­பனை1.82 கோடி ‘4ஜி’ ஸ்மார்ட் போன்கள் விற்­பனை ... என்.பி.எஸ்., கீழ் இரண்டு புதிய திட்டங்கள் என்.பி.எஸ்., கீழ் இரண்டு புதிய திட்டங்கள் ...
சி.சி.ஐ., தகவல்:நிறு­வ­னங்­களின் ரக­சிய கூட்­டுக்கு ‘ஆப்பு’:அரசின் கொள்­முதல் செலவு குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 செப்
2016
03:57

புது­டில்லி;‘‘அரசு துறை­க­ளுக்கு பொருட்­களை சப்ளை செய்­வதில், நிறு­வ­னங்கள் ரக­சி­ய­மாக கூட்டு சேர்ந்து, விலை நிர்­ணயம் செய்­வதை தடுக்க எடுக்­கப்­பட்டு வரும் நட­வ­டிக்­கை­களால், அரசின் கொள்­முதல் செலவு குறையும்,’’ என, சந்தை போட்டி கட்­டுப்­பாட்டு ஆணை­ய­மான – சி.சி.ஐ., தலைவர் டி.கே.சிக்ரி தெரி­வித்து உள்ளார்.
அவர், மேலும் பேசி­ய­தா­வது:இந்­தி­யாவின் மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், அரசு துறை­க­ளுக்கு தேவைப்­படும் பொருட்­க­ளுக்­கான செல­வினம், 30 சத­வீ­த­மாக உள்­ளது. மத்­திய பட்­ஜெட்டில், ரயில்வே, பாது­காப்பு மற்றும் தொலைத்­தொ­டர்பு துறை­க­ளுக்கு ஒதுக்­கப்­படும் நிதியில், 50 சத­வீதம், பொருட்­களை கொள்­முதல் செய்­யவும், சேவை­களைப் பெறவும் செல­வி­டப்­ப­டு­கி­றது. இது, ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறையில், 26 சத­வீ­த­மாக உள்­ளது. ரக­சி­ய­மாக கூட்டுபொருட்­களை சப்ளை செய்­வ­தற்­காக, நிறு­வ­னங்கள் அளிக்கும் ஒப்­பந்த புள்­ளி­களை, அரசு அதி­கா­ரிகள் தீவி­ர­மாக பரி­சீ­லிக்க வேண்டும். நிறு­வ­னங்கள் குறிப்­பிடும் விலை, சந்தை நில­வ­ரத்தை பிர­தி­ப­லிக்­கி­றதா என, ஆராய வேண்டும்.
நிறு­வ­னங்கள் ரக­சி­ய­மாக கூட்டு வைத்துக் கொண்டு, விலையை உயர்த்தி உள்­ள­னவா என்­பதை ஆய்வு செய்து, உண்­மைத்­தன்­மையை உறு­திப்­ப­டுத்தி கொள்ள வேண்டும். இது போன்ற நட­வ­டிக்­கைகள் மூலம், அரசின் பொருட்கள் மற்றும் சேவை­க­ளுக்­கான கொள்­முதல் செலவில், ௨ சத­வீ­தத்தை மிச்­சப்­ப­டுத்­தினால் கூட, பட்­ஜெட்டில், நிதிப் பற்­றாக்­குறை என்­பதே இருக்­காது. நிறு­வ­னங்கள் கூட்­டணி அமைத்துக் கொண்டு, விலை நிர்­ணயம் செய்­வது, ஒப்­பந்தப் புள்ளி கோரு­வது ஆகி­யவை, சந்தைப் போட்டி சட்­டத்தின் கீழ் குற்­ற­மாகும். இத்­த­கைய நட­வ­டிக்­கை­களை, தற்­போது, மத்­திய, மாநில அரசு துறைகள், பொதுத் துறை நிறு­வ­னங்கள் ஆகி­யவை, தீவி­ர­மாக கண்­கா­ணிக்க துவங்­கி­யுள்­ளன. ஒப்­பந்தப் புள்ளி நடை­மு­றை­களில், நிறு­வ­னங்கள் கூட்டு சேர்ந்து செயல்­ப­டு­கின்­ற­னவா என, அரசு அதி­கா­ரிகள் ஆராய்­கின்­றனர். ஏலத்தில் பங்­கேற்போர், தனிப்­பட்ட நபர்­களா அல்­லது ஒரே நிறு­வ­னத்தைச் சேர்ந்­த­வர்­களா எனவும் ஆய்வு செய்­கின்­றனர். ஒப்­பந்தப் புள்­ளியில், ஒரே மாதி­ரி­யாக விலை குறிப்­பிட்­டி­ருந் தால், உய­ர­தி­கா­ரி­யிடம் புகார் செய்­யப்­ப­டு­கி­றது. இதற்கு முன், இது போன்ற நடை­முறை கிடை­யாது.
அதி­கா­ரிகள் ஆய்வு:பொதுத் துறை நிறு­வனம், அனைத்து ஒப்­பந்தப் புள்­ளி­க­ளையும், ஒரே மாதிரி பாவிக்கும்; குறைந்த விலை குறிப்­பி­டு­வோ­ருக்கு உரிமம் வழங்கும். இப்­போது, குறைந்த விலை­யாக தோன்­று­வது, உண்­மை­யி­லேயே குறைந்த விலை தானா என, அதி­கா­ரிகள் ஆய்வு செய்­கின்­றனர். இத்­த­கைய நட­வ­டிக்­கையால், பொருட்­களை கொள்­முதல் செய்­வ­தற்­கான அரசின் செல­வினம், குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு குறையும்.இவ்­வாறு அவர் கூறினார்.
கூட்டு சேர்ந்து, பொருட்­களின் விலையை உயர்த்தும் நிறு­வ­னங்­க­ளுக்கு, அப­ராதம் விதிக்­கப்­ப­டு­கி­றது. நிறு­வ­னங்கள், விதி­களை மீறாமல், ஒழுக்­கத்­துடன் செயல்­பட வேண்டும் என, விரும்­பு­கி­றோமே தவிர, அப­ராதம் விதிப்­பது, எங்கள் நோக்கம் அல்ல.– டி.கே.சிக்ரி, தலைவர் இந்­திய சந்தை போட்டி கட்­டுப்­பாட்டு ஆணையம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)