இந்தியாவில் சம்பள விகித வளர்ச்சி குறைவுஇந்தியாவில் சம்பள விகித வளர்ச்சி குறைவு ... நிதி முன்னேற்றம் அறிவது எப்படி? நிதி முன்னேற்றம் அறிவது எப்படி? ...
இலக்­கு­களை அடையும் வழி!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2016
05:13

நிதி திட்­ட­மி­டலில் இலக்­கு­களே முக்­கிய அம்­ச­மாக இருக்­கி­றது. சேமிப்பு முதல் முத­லீடு வரை எல்­லாமே நிதி இலக்­கு­களின் அடிப்­ப­டை­யி­லேயே அமைய வேண்டும். இலக்­கு­களை அடை­வ­தற்­கான எளிய வழி­யாக ஸ்மார்ட் இலக்கு எனும் கருத்­தாக்கம் முன்­வைக்­கப்­ப­டு­கி­றது. இலக்கை அடைய தேவை­யான ஐந்து முக்­கிய அம்­சங்­க­ளுக்­கான ஆங்­கில வார்த்­தை­களின் முதல் எழுத்­துக்­களின் சுருக்­க­மாக (S.M.A.R.T) இது அமை­கி­றது. இந்த கருத்­தாக்­கத்தை பின்­பற்றி இலக்­கு­களை அடையும் வழி குறித்து பால் ஜே.மெயர் தன், ‘ஆட்­டி­டியூட் ஈஸ் எவ்­ரிதிங்’ புத்­த­கத்தில் விவ­ரிக்­கிறார்:
நோக்கம்: ஸ்பெசிபிக் எனும் ஆங்­கில வார்த்­தையை இது குறிக்­கி­றது. இலக்­குகள் பொது­வா­ன­தாக இல்­லாமல் குறிப்­பிட்ட நோக்கம் கொண்­ட­தாக, தெளி­வாக இருக்க வேண்டும் என்­பதை இது உணர்த்­து­கி­றது. இலக்­குகள் குறிப்­பிட்ட நோக்­கத்­துடன் அமைய, அவற்றில் எதிர்­பார்க்­கப்­ப­டு­வது என்ன, அவை ஏன் முக்­கி­ய­மா­னவை, அவற்றில் தொடர்­பு­டைய அம்­சங்கள் என்ன, அவை நிகழும் இடம் மற்றும் அவற்­றுக்கு தேவை­யா­னவை என்ன ஆகிய அம்சங்­களை கொண்­டி­ருக்க வேண்டும்.
அளவு: இரண்­டா­வது வார்த்­தை­யான மெஷ­ரபிள் இலக்­குகள் அள­வி­டக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்­டி­யதை குறிக்­கி­றது. அள­விட முடி­யாத இலக்­குகள் அடைய முடி­யா­தவை என்றே பொருள். மேலும், இலக்­கு­களின் முன்­னேற்­றத்தை அறிவதன் மூலம் சரி­யான திசையில் செல்­கி­றோமா என்­ப­தையும், குறித்த காலத்தில் அவற்றை அடை­வ­தையும் உறுதி செய்து கொள்­ளலாம். எவ்­வ­ளவு பெற்­றி­ருக்­கிறோம் என்­பதை இலக்கை அடைந்­த­வுடன் நாம் உணர வேண்டும்.
சாத்­தியம்: அட்­டை­னபிள் எனும் மூன்­றா­வது வார்த்தை இலக்­குகள் யதார்த்­த­மா­ன­தாக இருக்க வேண்டும் என்­பதை குறிக்­கி­றது. அதா­வது இலக்­குகள் அடை­யக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும். இலக்­குகள் எட்ட முடி­யாத தன்மை கொண்­ட­தா­கவும் இருக்கக் கூடாது; சரா­ச­ரிக்கும் கீழும் இருக்கக் கூடாது. உங்­க­ளுக்கு முக்­கி­ய­மான இலக்­கு­களை தீர்­மா­னிக்கத் துவங்­கும்­போதே அதை அடை­வ­தற்­கான வழி­க­ளையும் யோசிக்க வேண்டும். இதன் மூலம் இதற்கு முன் தவ­ற­விட்ட வாய்ப்­பு­க­ளையும் கண்­ட­றிந்து பயன்­படுத்­திக்­கொள்ளும் நிலை உண்­டா­கலாம்.
பொருத்தம்: இலக்­குகள் பொருத்­த­மா­ன­தாக இருக்க வேண்டும் என்­பதை ரெலவண்ட் எனும் வார்த்தை குறிக்­கி­றது. மற்ற மூன்று அம்­சங்கள் இருந்து, பொருத்­த­மில்­லாமல் இருந்­தாலும் இலக்­கு­களை அடை­வது சாத்­தி­ய­மில்லை. பொருத்­த­மான இலக்­குகள் தனி­ந­பர்­களை முன்­னோக்கி இயக்­கு­கின்­றன. இது மதிப்பு மிக்­கதா? இதை மேற்­கொள்ள சரி­யான நேரம் தானா? போன்ற கேள்­வி­க­ளுக்கு நம்­மிடம் பதில் இருந்தால் இலக்கு பொருத்­த­மா­ன­தாக இருக்கும்.
காலம்: இலக்கை தீர்­மா­னிக்கும் போதே அதற்­கான கால அள­வையும் நிர்­ண­யித்­துக்­கொள்ளும் அவ­சி­யத்தை டைம் பவுண்ட் எனும் வார்த்தை குறிக்­கி­றது. இலக்­கு­க­ளுக்­கான கால அளவு ஒரு கெடு­வாக அமைந்து நம்மை இயக்­கு­கி­றது. எப்­போது எனும் கேள்­விக்கு இது பதி­லாக அமைய வேண்டும். அதா­வது, எத்­தனை மாதங்கள் அல்லது ஆண்­டு­களில் இலக்கை அடை­யப்­போ­கிறோம் என வரை­ய­றுத்­துக்­கொள்ள வேண்டும்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)