பதிவு செய்த நாள்
19 செப்2016
05:08

இந்தியாவில் ஊழியர்களின் சம்பள விகித வளர்ச்சி 2008 பொருளாதார தேக்க நிலைக்குப்பிறகு 0.2 சதவீதம் மட்டுமே அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
சர்வதேச நிறுவனமான கார்ன் பெரியின் ஹே குழும பிரிவு, உலக நாடுகள் மத்தியில் சம்பள விகித உயர்வு பற்றிய ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இதன் படி, 2008க்கு பிறகு இந்தியாவில் சம்பள விகித வளர்ச்சி, 0.2 சதவீதம் எனும் அளவுக்கு மிகவும் குறைவாக உள்ளது. சீனாவில் இது அதிகபட்சமாக, 10.6 சதவீதமாக இருக்கிறது.இந்தோனேஷியாவில் இது, 9.3 சதவீதமாகவும், மெக்சிகோவில், 8.9 சதவீதமாகவும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துருக்கி, பிரேசில், ரஷ்யா, அர்ஜென்டினா ஆகிய நாடுகளில் இது எதிர்மறையான அளவில் இருந்துள்ளது.
இந்தியாவில் சம்பள விகித வளர்ச்சியில் பெரும் ஏற்றத்தாழ்வு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. குறைந்த சம்பளம் பெறும் பிரிவில் உள்ளவர்கள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதிக சம்பளம் பெறும் பிரிவில் உள்ளவர்களுக்கு பாதிப்பு அதிகமில்லை.வளர்ந்த நாடுகளில் அமெரிக்கா சம்பள வளர்ச்சியில் மோசமான பாதிப்பை சந்தித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|