‘ஸ்மார்ட்’ சக்சஸ்.. மலைக்க வைக்கும் மார்க்கெட்‘ஸ்மார்ட்’ சக்சஸ்.. மலைக்க வைக்கும் மார்க்கெட் ... இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.93 இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 66.93 ...
இந்­திய நிறு­வன பங்­கு­களில் அன்­னிய முத­லீடு அதி­க­ரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 செப்
2016
05:23

மும்பை : ‘சர்­வ­தேச பொரு­ளா­தார மந்­த­நி­லை­யிலும், இந்­திய நிறு­வ­னங்­களின் பங்­கு­களில், வெளி­நாட்­டினர் மேற்­கொண்டு வரும் முத­லீடுஅதி­க­ரித்து வரு­கி­றது’ என, கோட்டக் இன்ஸ்­டி­டி­யூ­ஷனல் ஈக்­யுட்டி ரீசர்ச் நிறு­வனம்தெரி­வித்­துள்­ளது.
இந்­நி­று­வனம், நடப்பு 2016 – 17ம் நிதி­யாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் வரை­யி­லான முதல் காலாண்டில், மும்பை பங்குச் சந்­தையின், ‘பி.எஸ்.இ – 200 ’ குறி­யீட்டு நிறு­வ­னங்கள் ஈர்த்த பங்கு முத­லீ­டுகள் குறித்து ஆய்வு மேற்­கொண்­டது. அதில், உள்­நாட்டை விட, அன்­னிய முத­லீட்டு நிறு­வ­னங்கள், இந்­திய நிறு­வ­னங்­களில் மேற்­கொண்ட முத­லீடு அதி­க­ரித்­தி­ருப்­பது தெரி­ய­வந்­துள்­ளது.
இது குறித்த ஆய்­வ­றிக்கை விபரம்: அன்­னிய முத­லீட்டு நிறுவனங்கள், ‘பி.எஸ்.இ., – 200 ’ குறி­யீட்டு நிறு­வ­னங்­களில், ஏப்., – ஜூன் வரை மேற்­கொண்ட முத­லீடு, 7 சத­வீதம் உயர்ந்து, 31,100 கோடி டால­ராக அதி­க­ரித்­துள்­ளது. இது, கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டின், ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலண்டில், 29,100 கோடி டால­ராக இருந்­தது. இதே காலத்தில், அன்­னிய நிதி முத­லீட்டு நிறு­வ­னங்­களின், சத­வீத அடிப்­ப­டை­யி­லான முத­லீடு, 24.5 சத­வீ­தத்தில் இருந்து, 24.9 சத­வீ­த­மாக அதி­க­ரித்­துள்­ளது.அதே சமயம், இதே காலத்தில், உள்­நாட்டு நிதி நிறு­வ­னங்­களின் முத­லீடு, 11.1 சத­வீ­தத்தில் இருந்து, 11.4 சத­வீத அள­விற்கே உயர்ந்­துள்­ளது.
அன்­னிய முத­லீட்டு நிறு­வ­னங்கள், வங்கி, தொழில்­நுட்பம் ஆகிய துறை­களில் முத­லீடு செய்­வதில் ஆர்வம் காட்­டு­கின்­றன. நுகர்வோர் மற்றும் தொழில் சார்ந்த துறை­களில், முத­லீடு செய்வது குறை­வா­கவே உள்­ளது. அன்­னிய முத­லீட்­டா­ளர்கள், வாகனம், எரி­சக்தி, வங்கி ஆகிய துறை­களில் முத­லீ­டு­களை அதி­க­ரித்து வரு­கின்­றனர்.இதற்கு நேர்­மா­றான கொள்கையை, இந்­திய பரஸ்­பர நிதி நிறு­வ­னங்கள் கடை­பி­டிக்­கின்­றன. அவை, வாகனம், சிமென்ட் ஆகிய துறை­களில் உள்ள நிறு­வ­னங்­களின் பங்­கு­களை விற்­பனை செய்து வரு­கின்­றன; தொழில் மற்றும் வங்கித் துறை­களில் முத­லீ­டு­களை அதி­க­ரித்து வரு­கின்­றன.
குறிப்­பாக, மருந்து துறையில், பங்கு முத­லீ­டு­களை உயர்த்­து­வ­தற்கு கூடுதல் முக்­கி­யத்­துவம் அளிக்­கின்­றன. தொழில்­நுட்பம், நுகர்வோர், உலோகம் மற்றும், சுரங்கத் துறை சார்ந்த நிறு­வ­னங்­களில் முத­லீடு செய்யும் ஆர்வம் குறை­வா­கவே உள்­ளது. இந்­தி­யாவைச் சேர்ந்த, பாரத் பைனான்­சியல் இன்க்­ளுஷன், எச்.டி.ஐ.எல்., கேஸ்ட்ரால் இந்­தியா ஆகிய நிறு­வ­னங்­களின் பங்­கு­களில், அன்­னிய நிதி முத­லீட்டு நிறு­வ­னங்கள் அதிக அளவில் முதலீ­டு­களை உயர்த்தி வரு­கின்­றன. இந்­திய பரஸ்­பர நிதி நிறுவனங்கள், கேஸ்ட்ரால் இந்­தியா, இப்கா லேப­ரேட்­டரிஸ், யுனைடெட் புரு­வரீஸ் ஆகிய நிறு­வ­னங்­களின் பங்­கு­களை வாங்கிக் குவித்து வரு­கின்­றன. இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுஉள்­ளது.
தொலை­த்தொ­டர்பு துறையின் வர­லாற்றை நீங்கள் பார்த்­தீர்கள் என்றால், கடந்த 18–20 ஆண்­டு­களில், எப்­போ­தெல்லாம் கட்­ட­ணங்கள்குறித்த போர் கட்­ட­விழ்த்து விடப்­பட்­டதோ, அப்­போ­தெல்லாம் அவை நுகர்­வோர்­க­ளுக்கு பய­னுள்­ள­தா­கத்தான் இருந்­தி­ருக்­கிறது. நுகர்­வோர் தான் அரசன். இதை மக்­க­ளுக்­காக செயல்­படும் எந்த அர­சாங்­கமும் ஏற்­றுக்­கொள்ளும் என நான் நம்­பு­கிறேன்.- மனோஜ் சின்ஹா, தொலை­த்தொ­டர்பு துறை அமைச்சர், நியு­யார்க்கில் உள்ள இந்­திய துாத­ரக அலு­வ­ல­கத்தில் பேசி­ய ­போது...

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)