பதிவு செய்த நாள்
30 செப்2016
00:15

புதுடில்லி:பொது துறையைச் சேர்ந்த, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின், ஏழு சதவீத பங்கு விற்பனை, நேற்று துவங்கியது.இன்றுடன் முடிவடையும், ஏலமுறையிலான இப்பங்கு வெளியீட்டில், ஒரு பங்கின் விலை, 62 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மொத்தம், 6.47 கோடி பங்குகளை வெளியிட்டு, 400 கோடி ரூபாய் திரட்ட, இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசு, நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், பொது துறை நிறுவனங்களில், குறிப்பிட்ட அளவிலான பங்குகளை விற்பனை செய்து, 56,500 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், தற்போது, இந்துஸ்தான் காப்பர் நிறுவனத்தின் பங்கு விற்பனை மேற்கொள்ளப்படுகிறது.நேற்று, மும்பை பங்குச்சந்தை வர்த்தகத்தின் இடையே, இந்துஸ்தான் காப்பர் நிறுவன பங்கின் விலை, ஆறு சதவீதத்திற்கும் அதிகமாக சரிவடைந்தது. பங்கு வர்த்தகத்தின் இறுதியில், 3.90 ரூபாய் குறைந்து, 61.65 ரூபாயில் நிலைபெற்றது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|