பதிவு செய்த நாள்
01 அக்2016
01:55

புனே:மகிந்திரா குழுமத்தைச் சேர்ந்த, மகிந்திரா அக்ரி சொல்யூஷன்ஸ், விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்குதல் உள்ளிட்ட, வேளாண் துறை சேவையில் ஈடுபட்டு வருகிறது. பெங்களூரைச் சேர்ந்த, ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனமான மேரா கிசான், இணையதள வணிகத்தில் உள்ளது. இந்நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக கொள்முதல் செய்யும் தரமான காய்கறி, பழ வகைகளை, மக்களுக்கு விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில், மகிந்திரா அக்ரி, மேரா கிசான் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது.
இதுகுறித்து, மகிந்திரா அக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், அசோக் சர்மா கூறியதாவது:மேரா கிசான் நிறுவனத்தில் முதலீடு செய்வதன் மூலம், விவசாயிகள், நுகர்வோர் இடையில், டிஜிட்டல் முறையில் தொடர்பு ஏற்படுத்தப்படும். விவசாயிகளுக்கு, புதிய தொழில்நுட்பத்தில் பயிர்களை பயிரிடுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|