பதிவு செய்த நாள்
07 அக்2016
07:24

புதுடில்லி : நிஸான் நிறுவனம், இந்தியாவில், எட்டு புதிய கார்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
நிஸான் மோட்டார் நிறுவனம், 1986ல், ‘டட்சன்’ எனும் காரை அறிமுகம் செய்தது; இந்த கார், நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து, டில்லியில், டட்ஸன் கோ காரை, 2014ல் அறிமுகப்படுத்தியது. தற்போது, இந்தோனேஷியா, ரஷ்யா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகளிலும், இந்த கார் கிடைக்கிறது. இந்தியாவில், டட்சன் காரில், மேலும் சில மாறுதல்களை செய்து மேம்படுத்த, நிஸான் திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்து, நிஸான் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது: எங்கள் நிறுவனம், 2021ல், இந்தியாவில், எட்டு மாடலில், கார்களை அறிமுகம் செய்ய உள்ளது. இந்தியாவில் இருந்து, ஆப்ரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு, கார்களை ஏற்றுமதி செய்ய உள்ளோம். பண்டிகை காலத்தை முன்னிட்டு, அதிகளவில் கார்களை விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|