பதிவு செய்த நாள்
17 அக்2016
14:25

புதுடில்லி:'இந்தியாவில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன. 2050ல், 70 லட்சம் வேலைகள் குறைந்து விடும் ஆபத்து உள்ளது' என, ஆய்வறிக்கையில், பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளா தார பாதிப்புகளால், சில ஆண்டுகளாகவே, வர்த் தகம் மற்றும் உற்பத்தி துறைகள் பாதிக்கப்பட் டுள்ளன.இதனால், வேலைவாய்ப்பும் குறைந்து வருகிறது.
இந்நிலையில், டில்லியைச் சேர்ந்த, 'பிரஹார்' என்ற ஆய்வு அமைப்பு, இந்தியாவில் வேலை வாய்ப்பு தொடர்பாக, ஆய்வு நடத்தியது; அதன் விபரம்:இந்தியாவில், 2011ல், ஒன்பது லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன; இது, 2013ல், 4.19 லட்சமாகவும், 2015ல், 1.35 லட்சமாகவும் குறைந்துள்ளன. பொருளாதார பாதிப்பு களே இதற்கு காரணம். நாள்தோறும், 550 வேலைவாய்ப்புகள் மறைந்து வரு கின்றன. இதேநிலை தொடர்ந்தால், 2050ல், இந்தியா வில், 70 லட்சம் வேலைகள் காணாமல் போய் விடும்; அதேநேரத்தில், மக்கள் தொகை, கூடுதலாக, 60 கோடி உயர்ந்து விடும்.உலக அளவில்,ஏற்பட்டுள்ள பொரு ளாதார பாதிப்புகளால், இந்தியாவில், எதிர்பார்த்த நேரடி அந்நிய முதலீடு குவியவில்லை. அடுத்த, ஐந்து ஆண்டுகளில், சில ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு தான், பன்னாட்டு நிறுவனங்களின் முதலீடு இருக்கும்;அதிகபட்சமாக,60 லட்சம் பேருக்கு மட்டுமே வேலை கிடைக்கும்.இந்தியாவில் வேலைவாய்ப்பு குறைவதை தடுக்க, விவசாயம், சில்லரை வர்த்தகம், சிறு மற்றும் குறு தொழில்களை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 1சதவீதம்: இந்தியாவில், 50 சதவீதம் பேர், விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு பெறுகின்றனர் சிறு மற்றும் குறு தொழில்கள், 40 சதவீத வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. அமைப்பு சார்ந்த தொழில்கள் மூலம், 1 சதவீதம் பேர் மட்டுமே வேலைவாய்ப்பு பெறுகின்றனர். அமைப்பு சார்ந்த தொழில்களில், மூன்று கோடி வேலைவாய்ப்புகளே உள்ளன.விவசாயம் பாதிப்பு: 'இந்தியாவில் விவசாயம் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளதே, வேலைவாய்ப்பு குறைவதற்கு முக்கிய காரணம்' என, உலக வங்கி சுட்டிக் காட்டியுள்ளது. 1994ல், இந்தியாவில், 60 சதவீதம் பேர், விவசாயம் சார்ந்த தொழில்கள் மூலம் வேலைவாய்ப்பு பெற்று வந்தனர்; 2013 நிலவரப்படி, இது, 50 சதவீதமாக குறைந்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|