பதிவு செய்த நாள்
24 அக்2016
23:12

மும்பை : டாடா சன்ஸ் நிறுவன தலைவர் பதவியில் இருந்து சைரஸ் மிஸ்திரி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் ; ரத்தன் டாடா மீண்டும் தலைவரானார்.
டாடா குழுமத்தை நிர்வகிக்கும் டாடா சன்ஸ் நிறுவனத்தில், சைரஸ் மிஸ்திரியின், ஷபூர்ஜி பலோன்ஜி நிறுவனம் பெரும்பான்மை பங்குகளை வைத்துள்ளது. இதனாலும், பாரம்பரியமிக்க டாடா குழுமத்தை வளர்த்தெடுப்பார் என்ற நம்பிக்கையாலும், சைரஸ் மிஸ்திரியை, டாடா சன்ஸ் தலைவர் ரத்தன் டாடா, 2011ல், தன் வாரிசாக அறிவித்தார். இதையடுத்து, டாடா சன்ஸ் துணை தலைவராகி, பின் தலைவரானார், சைரஸ் மிஸ்திரி. அவர், டாடா நிறுவனங்கள் சிலவற்றை, நலிவில் இருந்து மீட்காமல், விற்க ஆர்வம் காட்டியது, ரத்தன் டாடாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மும்பையில் நேற்று கூடிய டாடா சன்ஸ் இயக்குனர் குழு, சைரஸ் மிஸ்திரியை தலைவர் பதவியில் இருந்து நீக்கியது. டாடா சன்ஸ் தலைவராக மீண்டும் ரத்தன் டாடாவை நியமிக்க ஒப்பதல் அளித்தது. ரத்தன் டாடா, நான்கு மாதங்களுக்குள், புதிய தலைவரிடம், பொறுப்பை ஒப்படைப்பார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|