பதிவு செய்த நாள்
27 அக்2016
14:13
பெங்களூரு: விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய, கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கர்நாடகா அமைச்சரவை கூட்டம் முதல்வர் சித்தராமையா தலைமையில் பெங்களூரு விதான் சவுதாவில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பின், நிருபர்களிடம் சட்டத்துறை அமைச்சர் டி.பி.ஜெயசந்திரா கூறியதாவது: அரசு ஊழியர்கள் நியமனத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களை அவர்களுக்கே வழங்கவும், ஒரு வேளை மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பிக்கவில்லை என்றால், அந்த இடம் காலியாக வைக்கப்பட்டு, அடுத்த முறை வழங்கப்படும் 'ஸ்கவுட்ஸ் அண்ட் கைட்ஸ்' 17வது தேசிய மாநாட்டுக்கு, 10 கோடி ரூபாய் வழங்க அனுமதி கிராமப்பகுதிகளிலும் பிளாஸ்டிக் தடையை அமல்படுத்த அதிகாரிகள் நியமனம் கலபுரகி பெரிபெரல் கேன்சர் மருத்துவமனையை அபிவிருத்தி செய்ய, 11 கோடி ரூபாய் ஒதுக்கீடு பாவகடா மற்றும் டி.நரசிபுரா ஆரம்ப சுகாதார மையத்தில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றி வந்த, டாக்டர் ரேவதி, 1,000 ரூபாய் லஞ்சம் பெற்றதாக, லோக் ஆயுக்தா போலீசாரால் உறுதி செய்யப்பட்டுள்ளதால், கட்டாய ஓய்வில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது வெங்காயம் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது தொடர்பாக, அமைச்சரவையில் விரிவாக பேசப்பட்டது. மூன்றரை லட்சம் ஏக்கரில், வெங்காயம் பயிரிடப்பட்டிருந்தது. விலை குறைந்துள்ளதால், விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். ஒரு கிலோவுக்கு, 11 ரூபாய் நிவாரணம் வழங்கும்படி மத்திய அரசை கேட்கவுள்ளோம். அவர்களின் முடிவை பார்த்து, மாநில அரசு தீர்மானிக்கும் வெங்காயத்தை நேரடியாக கொள்முதல் செய்ய அரசு, மார்க்கெட்டில் வெங்காயம் கடைகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது கர்நாடகத்தில், 110 தாலுகாக்களில் வறட்சியால், 12 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இந்த தாலுகாக்களுக்கு, 3,343 கோடி ரூபாய் வழங்க தேசிய பேரிடர் மீட்பு குழு நிதியிலிருந்து வழங்கும்படி மத்திய அரசுக்கு, கடிதம் அனுப்பப்படும் கலபுரகி, பீதர் மாவட்டங்களில் கன மழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், 2,000 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. பேரிடர் மீட்பு குழுவிடமிருந்து, 386 கோடி ரூபாய் வழங்கும்படி கோர முடிவு செய்யப்பட்டுள்ளது இதற்காக, கர்நாடக விவசாய துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடா, வருவாய் துறை அமைச்சர் திம்மப்பா, மத்திய அமைச்சரவை சந்தித்து, கோரிக்கை மனு வழங்கவுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|