ஊதி­ய­மற்ற உழைப்பில் இந்­திய பெண்கள் ‘நம்பர் 1’ஊதி­ய­மற்ற உழைப்பில் இந்­திய பெண்கள் ‘நம்பர் 1’ ... முந்­திரி விலை உயர்வு; ஏற்­று­ம­தியில் தொடர் சரிவு முந்­திரி விலை உயர்வு; ஏற்­று­ம­தியில் தொடர் சரிவு ...
தீபா­வளி – கிறிஸ்­துமஸ் அன்­ப­ளிப்பு அட்­டைகள் விற்­பனை 1 கோடியை தாண்ட வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2016
07:48

புது­டில்லி : ‘இந்­தாண்டு, தீபா­வளி, கிறிஸ்­துமஸ் பண்­டிகை காலத்தில், பல்­வேறு பயன்­பா­டு­க­ளுக்கு வழங்­கப்­படும் அன்­ப­ளிப்பு அட்­டை­களின் விற்­பனை, 1 கோடியை தாண்டும்’ என, க்விக்­சில்வர் நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.
இந்­நி­று­வனம், 500 நக­ரங்­களில், 4 லட்­சத்­திற்கும் அதி­க­மா­னோ­ரிடம், பண்­டிகை கால பரி­சுகள் குறித்து ஆய்வு மேற்­கொண்­டது. அதில், 73 சத­வீ­தத்­திற்கும் அதி­க­மானோர், இந்­தாண்டு ரொக்­கத்­திற்கு பதி­லாக, நண்­பர்கள், உற­வி­னர்கள் ஆகி­யோ­ருக்கு, ‘கிப்ட் கார்ட்’ எனப்­படும், பண மதிப்பை கொண்ட அன்­ப­ளிப்பு அட்­டை­களை வழங்க உள்­ள­தாக தெரி­வித்து உள்­ளனர்.ஆய்வில் பங்­கேற்ற நிறு­வ­னங்­களில், 70 சத­வீத கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள், அவற்றின் ஊழி­யர்­க­ளுக்கு, விருப்­ப­மான பொருட்­களை தேர்வு செய்து கொள்ளும் வச­தி­யுள்ள, அன்­ப­ளிப்பு அட்­டை­களை அளிக்க உள்­ள­தாக தெரி­வித்து உள்­ளன.
பல நிறு­வ­னங்கள், இந்­தாண்டு தனிச்­சி­றப்பு கொண்ட பிரத்­யேக அன்­ப­ளிப்பு அட்­டை­களை, ஊழி­யர்­க­ளுக்கு வழங்­கி­யுள்­ளன. ஆய்வில், 45 சத­வீத நிறு­வ­னங்கள், பணி­யா­ளர்­களை அசத்த, புது­மை­யான பொழுது போக்கு நிகழ்ச்­சி­களில் பங்­கேற்கும் வாய்ப்­புடன், அதிக மதிப்­புள்ள அன்­ப­ளிப்பு அட்­டை­களை வழங்­கு­வ­தாக கூறி­யுள்­ளன. இந்­தாண்டு, தீபா­வளி, கிறிஸ்­துமஸ் பண்­டிகை காலத்தை முன்­னிட்டு, பல நிறு­வ­னங்கள், புதிய பிராண்­டு­களில், அன்­ப­ளிப்பு அட்­டை­களை வெளி­யிட்டு உள்­ளன.
பல்­பொருள் அங்­கா­டி­களில் பொருட்கள் வாங்­கவும், ஓட்­டல்­களில் தங்­கவும், உண­வ­ருந்­தவும், சுற்­றுலா செல்­லவும், வீட்டு பயன்­பாட்டு சாத­னங்கள், நவ­நா­க­ரிக ஆடைகள் போன்­ற­வற்றை வாங்­கவும், பிரத்­யேக அன்­ப­ளிப்பு அட்­டை­களை, பல நிறு­வ­னங்கள் வெளி­யி­டு­கின்­றன. சில்­லரை விற்­பனை நிறு­வ­னங்கள், வாடிக்­கை­யா­ளர்­களை கவர்ந்­தி­ழுக்க, பல்­வேறு அன்­ப­ளிப்பு அட்­டை­களை வழங்­கு­கின்­றன. இந்த வகையில், வர்த்­தக மேம்­பாடு, ஊக்­கத்­தொகை, ‘டாப் அப்’ என, பல­வித கவர்ச்­சி­க­ர­மான அன்­ப­ளிப்பு அட்­டைகள், சந்­தையில் புழக்­கத்தில் உள்­ளன. தள்­ளு­படி சலு­கை­க­ளுடன் கிடைக்கும் இவ்­வகை அன்­ப­ளிப்பு அட்­டை­க­ளுக்கு, இந்­திய மக்­க­ளி­டையே வர­வேற்பு அதி­க­ரித்து வரு­கி­றது.
கடந்த, 2012 – 13ம் நிதி­யாண்­டுடன் ஒப்­பி­டும்­போது, 2015 – 16ம் நிதி­யாண்டில், அன்­ப­ளிப்பு அட்­டை­களின் விற்­பனை, 20 மடங்கு அதி­க­ரித்து உள்­ளது. இதே காலத்தில், அன்­ப­ளிப்பு அட்­டையின் மதிப்பு, சரா­ச­ரி­யாக, 850 ரூபாயில் இருந்து, 3,400 ரூபா­யாக உயர்ந்­துள்­ளது என, க்விக்­சில்வர் நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
பெருகும் வர­வேற்பு‘அமேசான், ஸ்நாப்டீல், பிளிப்கார்ட்’ போன்ற ஏரா­ள­மான நிறு­வ­னங்கள், பல­த­ரப்­பட்ட பொருட்கள் வாங்க, பிரத்­யேக அன்­ப­ளிப்பு அட்­டை­களை வெளி­யிட்டு உள்­ளன. பல வங்­கிகள், முத­லீடு சார்ந்த அன்­ப­ளிப்பு அட்­டை­களை அறி­மு­கப்­ப­டுத்தி உள்­ளன. தற்­போது, ‘இ – கிப்ட் கார்ட்’ எனப்­படும், வலை­தளம் வாயி­லான அன்­ப­ளிப்பு அட்­டை­க­ளுக்கும் வர­வேற்பு அதி­க­ரித்து வரு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)