பதிவு செய்த நாள்
26 நவ2016
07:36
புதுடில்லி : அமேசான் நிறுவனம், அமுல் பால் பொருட்களை, இணையதளத்தில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
இணையதள வணிகத்தில், அமெரிக்காவைச் சேர்ந்த அமேசான், பெரிய நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனம், உள்நாட்டில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள, அமுல் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதையடுத்து, அமுல் நெய், குலோப்ஜாமூன் ஆகியவற்றை, அமெரிக்காவில் விற்க, அமேசான் முடிவு செய்துள்ளது.
இது குறித்து, அமுல் நிர்வாக இயக்குனர், ஆர்.எஸ்.சோதி கூறியதாவது: அமெரிக்காவில், 30 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். கடந்த, 20 ஆண்டுகளாக, அந்நாட்டுக்கு, எங்கள் தயாரிப்புகளை ஏற்றுமதி செய்கிறோம். தற்போது, ஆண்டுதோறும், 30 – 35 கோடி ரூபாய் மதிப்பிலான பால் பொருட்கள், அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்நாட்டில், அமுல் பொருட்கள், இந்தியர்கள் அதிகம் உள்ள சில இடங்களில் மட்டும் விற்பனை செய்யப்படுகின்றன. அமேசான் ஒப்பந்தம் மூலம், எங்கள் தயாரிப்புகளை, அமெரிக்காவில், அதிகளவில் விற்பனை செய்ய முடியும். கடந்த நிதியாண்டில், அமுல் நிறுவனத்தின் விற்றுமுதல், 23 ஆயிரம் கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. இது, வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|