தங்க நாண­யங்­க­ளுக்கு கலால் வரி ரத்துதங்க நாண­யங்­க­ளுக்கு கலால் வரி ரத்து ...  சைபர் பணத்தை புரிந்து கொள்ள...  சைபர் பணத்தை புரிந்து கொள்ள... ...
‘இக்ரா’ நிறு­வனம் கணிப்பு:நிலக்­கரி விலை உயர்வால்உள்­நாட்டு உருக்கு துறை பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 டிச
2016
05:14

புது­டில்லி:‘சர்­வ­தேச சந்­தையில், சிறப்பு வகை நிலக்­க­ரியின் விலை உயர்ந்­துள்­ள­தாலும், மத்­திய அரசின், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யாலும், உள்­நாட்டு உருக்கு துறை பாதிக்­கப்­படும் வாய்ப்பு உள்­ளது’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது. அதன் விபரம்:நடப்பு, 2016 – 17ம் நிதி­யாண்டில், ஏப்., – ஜூன் வரை­யி­லான முதல் காலாண்டில், உருக்கு தேவைப்­பாடு குறைந்து, ஒரு­வித தேக்க நிலை காணப்­பட்டது.
கடந்த நிதி­யாண்டின் இதே காலாண்­டுடன் ஒப்­பிடும் போது, உருக்கு பயன்­பாடு, 0.4சத­வீத அள­விற்கே வளர்ச்சி கண்டிருந்­தது. ஆனால், ஜூலை – செப்., வரை­யி­லான இரண்­டா­வது காலாண்டில், உருக்கு பயன்­பாடு, 6.8 சத­வீதம் அதி­க­ரித்­தது. இந்­நி­லையில், சர்­வ­தேச சந்­தையில், கொதி­க­லன்­களில் பயன்­ப­டுத்தும் சிறப்பு வகை நிலக்­க­ரியின் விலை உயர்ந்­துள்­ளது. இது, அவ்­வகை நிலக்­க­ரியை சார்ந்­துள்ள உருக்கு நிறு­வனங்­களை பாதித்­துள்­ளது. சிறப்பு வகை நிலக்­கரி விலை உயர்வால், உருக்கு நிறு­வ­னங்­களின் மூலப்­பொ­ருட்கள் செலவினம் அதி­க­ரித்­துள்­ளது. கடந்த அக்­டோ­பரில், ஒரு டன், சிறப்பு வகை நிலக்­க­ரியின் விலை, 213 டால­ராக இருந்­தது. இது, தற்­போது, 309 டால­ராக உயர்ந்­துள்­ளது.
இதனால், நடப்பு நிதி­யாண்டில், ஜன., – மார்ச் வரை­யி­லான நான்­கா­வது காலாண்டில், உருக்கு நிறு­வ­னங்­களின் லாப வரம்பு குறையும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இத்­த­கைய சூழலில், மத்­தியஅரசின் பண மதிப்பு நீக்க நடவ­டிக்கை, உருக்கு துறைக்கு மேலும் பாதிப்பை ஏற்­படுத்தி உள்­ளது. குறிப்­பாக, செல்­லாத ரூபாய் நோட்டு அறி­விப்பால், கறுப்புப் பணம் அதி­க­ மாக புழங்கும், ரியல் எஸ்டேட் துறையின் வளர்ச்சி குறையும் என, மதிப்பிடப்­பட்டு உள்­ளது. இதன் தாக்­கத்தால், கட்­டு­மான பணி­க­ளுக்கு அவ­சி­ய­மான, உருக்கு கம்­பிகள், உருக்குஉரு­ளைகள் உள்­ளிட்­ட­வற்­றுக்­கான தேவை குறையும்.
இது, சிறிய மற்றும் நடுத்­தர உருக்கு நிறு­வ­னங்­களை பாதிக்கும்; அவற்றின், உருக்கு உற்­பத்தி குறையும். அதே சமயம், உருக்கு தக­டு­களை உற்­பத்தி செய்யும் நிறு­வ­னங்­க­ளுக்கு பாதிப்பு குறை­வாக இருக்கும்.ஊரகப் பகு­தி­களில், கூரைகள் அமைப்­ப­தற்­கான உருக்கு தகடு­களின் பயன்­பாடு அதிகம் உள்ளது. அங்கு, ரொக்கப் பயன்­பாடு அதிகம் உள்­ளதால், உருக்கு தகடு விற்­பனை சற்று குறையும். இருந்த போதிலும், உருக்கு தகடு தயா­ரிப்பு நிறு­வ­னங்­களுக்கு, பெரி­ய­ளவில் பாதிப்பு இருக்காது. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, வாகன துறையில், குறிப்­பாக, இரண்டு மற்றும் மூன்று சக்­கர வாக­னங்கள் விற்­ப­னையில், லேசான பாதிப்பை ஏற்­ப­டுத்தும். இதன் தாக்கம், வாக­னங்கள் தயா­ரிப்பில் முக்­கிய அங்கம் வகிக்கும், உருக்கு பொருட்கள்விற்­ப­னையில் எதி­ரொ­லிக்கும். இவ்­வாறு அதில் கூறப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–மத்திய நிதியமைச்சர் தலைமையிலான, 47 வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம் இன்று துவங்குகிறது.இன்றும் ... மேலும்
business news
புதுடில்லி–எரிபொருள் விலை அதிகரிப்பால், உள்நாட்டு விமானக் கட்டணங்கள் மீண்டும் உயர்த்தப்பட்டு உள்ளன.உலகின் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் வருமான சமத்துவமின்மை, கடந்த 2016 – 17ம் நிதியாண்டு முதல் சரிந்து வருவதாக, எஸ்.பி.ஐ., பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் தொடர்ச்சியான பணவீக்கம், அனைத்து வகைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என, டாடா குழுமத்தின் ... மேலும்
business news
தங்கம் 1 கி: 4,755.008 கி: 38,040.00வெள்ளி1 கிராம்: 65.7701 கிலோ: ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)