பதிவு செய்த நாள்
26 டிச2016
12:30
விருதுநகர்: விருதுநகரில், இரு வாரங்களுக்கு முன், 10 ஆயிரத்து, 400க்கு விற்கப்பட்ட, 100 கிலோ புதிய ரக துவரம் பருப்பு, இந்த வாரம், 8,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தமிழகத்திற்கு பருப்பு வகைகள் கர்நாடகா, மஹாராஷ்டிர மாநிலங்களில் இருந்து வருகிறது. கடந்த ஆண்டு உற்பத்தியான பருப்பு வகைகள், பல மாதங்களாக விற்பனை செய்யப்பட்டு வந்தன.
நடப்பாண்டு இறுதியில், துவரம் பருப்பு வரத்து அதிகமானதால், இரு வாரங்களுக்கு முன், 10 ஆயிரத்து, 400 ரூபாய்க்கு விற்பனையான, 100 கிலோ புதிய ரக முதல் வகை துவரம் பருப்பு, 1,900 ரூபாய் குறைந்து, 8,500க்கு விற்பனையானது. இரண்டாம் வகை, 2,100 ரூபாய் குறைந்து, 7,500க்கு விற்பனையானது. பருப்பு வியாபாரி ஒருவர் கூறுகையில், ''துவரம் பருப்பு விலை வேகமாக குறைந்து வருகிறது. வரும் காலங்களில், மேலும் குறைய வாய்ப்புள்ளது,'' என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|