ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி; 3 ஆண்டில் 3,000 கோடி டாலர்ஆயத்த ஆடைகள் ஏற்­று­மதி; 3 ஆண்டில் 3,000 கோடி டாலர் ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.84 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.67.84 ...
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால் வங்­கிகள் சுல­ப­மாக கடன் தர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 டிச
2016
23:41

புது­டில்லி : ‘பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், வங்­கிகள், தகு­தி­யுள்ள சிறு, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்கு சுல­ப­மாக கடன் வழங்கும் வாய்ப்பு கிடைத்­துள்­ளது’ என, இந்­திய தொழி­லக கூட்­ட­மைப்பு தெரி­வித்து உள்­ளது.
இக்­கூட்­ட­மைப்பின் டைரக்டர், ஜெனரல் சந்­தி­ரஜித் பானர்ஜி கூறி­ய­தா­வது: பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், வங்­கி­களில், ‘டிபாசிட்’ அதி­க­ரித்­துள்­ளது. இதன் மூலம், சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள், கார்ப்­பரேட் நிறு­வ­னங்கள் ஆகி­ய­வற்­றுக்கு, அதி­க­ளவில், வங்­கிகள் கடன் வழங்க முடியும். அதே சமயம், வங்­கிகள், வாராக்­கடன் பிரச்­னையும் வராமல், அவற்றின் சொத்து மதிப்பை உயர்த்திக் கொள்ள வேண்டும். இதற்கு, நிறு­வனம், நிறு­வனர், அந்­நி­று­வ­னத்தில் பணி­பு­ரியும் தொழி­லா­ளர்கள் உள்­ளிட்ட அனைத்து விப­ரங்­க­ளையும், வங்­கிகள் அறி­வது அவ­சியம்.
மத்­திய அரசு, அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் மின்­னணு மய­மாக்கி வரு­வதால், இத்­த­க­வல்­களை சுல­ப­மாக பெறலாம். ஒரு நிறு­வனம் குறித்து, அரசின் பல்­வேறு துறை­களில் பதிவு செய்­யப்­படும் தக­வல்­களை ஒருங்­கி­ணைத்து, அந்­நி­று­வ­னத்தின் கடன் தகுதி குறித்தும், அக்­க­டனை உரிய முறையில் திரும்பச் செலுத்தும் தகுதி, நிறு­வ­ன­ருக்கு உள்­ளதா என்­ப­தையும் அறிந்து கொள்­ளலாம்.
உதா­ர­ண­மாக, நிறு­வ­னங்கள் மற்றும் கூட்­ட­மைப்பு சட்­டத்தின் உட்­பி­ரிவின் கீழ், ஒரு நிறு­வ­னத்தின், ‘பான்’ எனப்­படும், வரு­மான வரி கணக்கு எண்ணை பெறலாம். அது போல, ‘டின், சின்’ எனப்­படும், வரி செலுத்­துவோர் அடை­யாள எண் மற்றும் செலுத்தும் வரிக்­கான பதிவு எண் போன்­ற­வற்றை பெற்று, அனைத்து விப­ரங்­க­ளையும் வங்­கிகள் அறி­யலாம். அது போல, ஒரு நிறு­வ­னத்தின் நிதி நில­வ­ரத்தை, மத்­திய கார்ப்­பரேட் விவ­கா­ரங்கள் அமைச்­ச­கத்­திடம் இருந்து பெறப்­படும் ஆண்­ட­றிக்கை மூலம் அறி­யலாம்; வரு­மான வரித்­து­றையில், படிவம் 26 ஏ.எஸ்.,–ல் அளிக்­கப்­பட்ட வருவாய் விப­ரங்­களை சரி பார்த்துக் கொள்­ளலாம்.
ஒரு நிறு­வ­னத்தில் பணி­யாற்றும் தொழி­லா­ளர்கள் குறித்த தக­வல்­க­ளையும், அவர்­க­ளுக்கு செலுத்­தப்­படும் சந்தா விப­ரங்­க­ளையும், தொழி­லாளர் வருங்­கால வைப்பு நிதி­யத்தில் இருந்து வங்­கிகள் பெறலாம். இத்­த­கைய, எண்­ணற்ற, ஒருங்­கி­ணைந்த தகவல் தொகுப்­பு­களின் அடிப்­ப­டையில், ஒரு நிறு­வ­னத்தின் செயல் திறனை எடை­போட்டு, கட­னு­தவி வழங்­கு­வது குறித்து, வங்­கிகள் சுல­ப­மாக முடி­வெ­டுக்­கலாம். இத்­த­கைய வச­தியால், ஒரு நிறு­வனம் அளிக்கும் தக­வலின் நம்­ப­கத்­தன்­மையை, வங்­கிகள் உறு­திப்­ப­டுத்திக் கொள்ள முடியும்; மோசடி தக­வல்­களை தரும் நிறு­வ­னத்தின் கடன் விண்­ணப்­பத்தை நிரா­க­ரிக்­கலாம்.
பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கையால், தற்­போது வங்­கி­க­ளிடம் பெருந்­தொகை குவிந்­துள்­ளது. அதனால், அவை, குறைந்த வட்­டியில் நிறு­வ­னங்­க­ளுக்கு கடன் வழங்கும் வாய்ப்பும் கிடைத்­துள்­ளது. இதனால், வங்கித் துறையும், தொழில் துறையும், ஒரு சேர வளர்ச்சி காணும் சூழல் உரு­வாகி உள்­ளது. இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
business news
வர்த்தக துளிகள் டிசம்பர் 26,2016
பின்வாங்கும் ‘ஓயோ’ நிறுவனம்விருந்தோம்பல் துறையை சேர்ந்த, ‘ஓயோ’ நிறுவனம், சந்தை சூழல்கள் ஓரளவு சரியான பிறகு, ... மேலும்
business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் டிசம்பர் 26,2016
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)