பதிவு செய்த நாள்
04 ஜன2017
00:02
புனே : போக்ஸ்வேகன் நிறுவனம், புனே ஆலையில், கடந்த ஆண்டில், 1.45 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளது.
கார்கள் உற்பத்தி, விற்பனையில் ஈடுபட்டு வரும், ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த, போக்ஸ்வேகன் நிறுவனத்திற்கு, மஹாராஷ்டிர மாநிலம், புனேவில், தொழிற்சாலை உள்ளது. அந்த ஆலையில், அந்நிறுவனம், 2016ல், 1.45 லட்சம் கார்களை உற்பத்தி செய்துள்ளது. 2009ல், ஆலை துவங்கியதில் இருந்து, இதுவரை மொத்தம், 7.20 லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புனேவில் உள்ள ஆலையில், போலோ, அமியோ, வெண்டோ, ஸ்கோடா, ரேப்பிட் உள்ளிட்ட கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கடந்த ஆண்டில், 36 ஆயித்து, 700 போலோ கார்கள்; 15 ஆயிரத்து, 400 அமியோ கார்கள்; 83 ஆயிரத்து, 300 வென்டோ கார்கள்; 9,600 ரேப்பிட் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டு உள்ளன. போலோ, வென்டோ கார்கள் ஏற்று மதி, 22 சதவீதம் அதிகரித்து, 84 ஆயிரத்து, 500 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, புனே ஆலையின் மொத்த உற்பத்தித்திறனில், 87 சதவீத அளவுக்கு, உற்பத்தி செய்யப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|