பதிவு செய்த நாள்
05 ஜன2017
23:34

புதுடில்லி : நடப்பு நிதியாண்டில், ஏப்., முதல், நவ., வரையிலான காலத்தில், இந்தியாவில் காப்புரிமை பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை, 8,273 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அரசின், தொழில் கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை, அறிவுசார் சொத்துரிமையின் கீழ், பொருட்களுக்கு காப்புரிமை பெறுவதை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் மூலம், ஒருவர் தயாரிக்கும் பொருட்கள் மீது, அடுத்தவர் சொந்தம் கொண்டாடுவது தடுக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில், உள்நாட்டை சேர்ந்த, 8,130 பேர், காப்புரிமை கோரி பதிவு செய்துள்ளனர். இது, கடந்த ஆண்டின், இதே காலத்தை விட, 2 சதவீதம் அதிகமாகும். இதே காலத்தில், வெளிநாட்டை சேர்ந்தவர்கள், காப்புரிமை கோரி, பதிவு செய்த எண்ணிக்கை, 23 ஆயிரத்து, 105ல் இருந்து, 21 ஆயிரத்து, 142 ஆக சரிவடைந்துள்ளது.
இது குறித்து, மத்திய தொழில் துறை அதிகாரி ராஜீவ் அகர்வால் கூறியதாவது: காப்புரிமை தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண, மத்திய தொழில் மற்றும் வர்த்தக துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அறிவுசார் சொத்துரிமை தொடர்பான குற்றங்களை விசாரிப்பதற்கு உதவும் வகையில், காவல் துறைக்கு சொத்துரிமை குறித்த, விளக்க குறிப்பேடுகளை வழங்கியுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|