பதிவு செய்த நாள்
06 ஜன2017
14:12

சியோல் : கேலக்சி நோட் 7 பியாஸ்கோ அறிமுகத்தால் 2016ம் ஆண்டின் இறுதி காலாண்டில் தங்கள் நிறுவனத்தின் லாபம் 50 சதவீதத்தை எட்டி உள்ளதாக சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது. இது கடந்த 3 ஆண்டுகளை விட அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சாம்சங் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் டிசம்பர் வரை செமிகன்டெக்டர் மைக்ரோசிப்ஸ் விற்பனை அதிகரித்ததன் விளைவாக வருவாய் அதிகரித்தது. இந்த காலாண்டில் 9.2 ட்ரில்லியன் டாலர்கள் லாபம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் 6.1 ட்ரில்லியன் டாலர்கள் லாபம் கிடைத்தது. 2013ம் ஆண்டிற்கு பிறகு காலாண்டு லாபம் மிகப் பெரிய அளவை எட்டி இருப்பது இதுவே முதல்முறையாகும் என தெரிவித்துள்ளது.
பல்வேறு முறைகேடு புகார்கள் காரணமாக சாம்சங் நிறுவன பொருட்களின் விற்பனை மந்தமடைந்திருந்தது. இந்நிலையில் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இந்த போன்கள் அதிகம் சூடேறி, தீப்பற்றுவதாக பல்வேறு புகார்கள் எழுந்த போதிலும், எதுவும் இதுவரை நிரூபனம் ஆகவில்லை. இந்நிலையில் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட்போனால் காலாண்டு லாபம் அதிகரித்திருப்பதாக சாம்சங்க நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|