பதிவு செய்த நாள்
28 ஜன2017
04:38
சென்னை : இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், சிமென்ட் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த, நடப்பு நிதிஆண்டின் மூன்றாவது காலாண்டில், 35.34 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டி உள்ளது.
இது, முந்தைய ஆண்டின் இதே மூன்றாவது காலாண்டில், 3.16 கோடி ரூபாய் என்றளவில் குறைந்திருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 1,066.13 கோடி ரூபாயில் இருந்து, 1,270.95 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின், ஒன்பது மாத காலத்தில், அதாவது, கடந்த ஏப்., – டிச., வரையிலான காலத்தில், அந்நிறுவனத்தின் நிகர லாபம், 141.73 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 79.46 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய், 3,520.93 கோடி ரூபாயில் இருந்து, 3,791.11 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|