பதிவு செய்த நாள்
28 ஜன2017
04:39
லண்டன் : நுகர்பொருட்கள் துறையைச் சேர்ந்த, இந்துஸ்தான் யூனிலீவர், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த, மூன்றாவது காலாண்டில், 1,037.93 கோடி ரூபாயை, தனிப்பட்ட நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 971.66 கோடி ரூபாயாக குறைந்திருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 8,384.68 கோடி ரூபாயில் இருந்து, 8,317.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
இது குறித்து, யூனிலீவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பால் போல்மன் கூறியதாவது: யூனிலீவர் நிறுவனத்துக்கு, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகள், முக்கிய சந்தைகளாக உள்ளன. இந்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பு; பிரேசிலின் பொருளாதார நெருக்கடி ஆகியவை, எங்களுக்கு கடும் சவாலாக இருந்தது. இருப்பினும், கடந்த ஆண்டில், எங்கள் நிறுவனத்தின் விற்பனை, 3.7 சதவீதம் உயர்ந்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|