‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு:நாட்டின் பணப்புழக்க பிரச்னை மார்ச்சில் இயல்பு நிலைக்கு திரும்பும்‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு:நாட்டின் பணப்புழக்க பிரச்னை மார்ச்சில் இயல்பு ... ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பட்ஜெட் தயா­ராகும் விதம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜன
2017
04:44

2017-- – 18ம் ஆண்­டுக்­கான பொது பட்ஜெட், பல­வி­தங்­களில் முக்­கி­யத்­துவம் மிக்­க­தாக விளங்­கு­கி­றது.
கறுப்பு பணத்தை ஒழிப்­ப­தற்­காக, அரசு அறி­வித்த பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்குப் பின், இந்த பட்ஜெட் தாக்கல் செய்­யப்­ப­டு­கி­றது. வழக்­க­மாக, பிப்­ர­வரி மாத இறு­தியில் தாக்கல் செய்­யப்­படும், வழக்­கத்­திற்கு மாறாக, இந்த பட்ஜெட் பிப்­ர­வரி, 1ம் தேதி தாக்­க­லா­கி­றது. மேலும், ரயில்வே பட்ஜெட் தனியே தாக்கல் செய்­யப்­ப­டாமல், மத்­திய பட்­ஜெட்­டுடன் இணைந்து தாக்­க­லா­கி­றது. நாட்டின் பட்ஜெட் தயா­ராகும் விதம் மற்றும் அதன் முக்­கிய அம்­சங்கள் குறித்து, ஒரு பார்வை:
--தகவல் சேக­ரிப்புரயில்வே பட்­ஜெட்டை மத்­திய பொது பட்­ஜெட்­டுடன் இணைக்­கவும், முன்­கூட்­டியே தாக்கல் செய்­யவும், கடந்த ஆண்டு செப்­டம்பர் மாதம், மத்­திய அமைச்­ச­ரவை ஒப்­புதல் அளித்­தது. எனினும், பட்ஜெட் முன்­கூட்­டியே தாக்கல் ஆகலாம் என்­பதை எதிர்­பார்த்து, சில மாதங்கள் முன்பே, நிதி அமைச்­சகம் தயா­ரிப்பு பணி­களை துவக்கி விட்­டது. பல்­வேறு துறை­களில் இருந்து தக­வல்­களை சேக­ரித்து, பட்­ஜெட்­டிற்­கான திருத்­தப்­பட்ட மதிப்­பீட்டை நிதி அமைச்­சகம் உரு­வாக்கும் பணியில் ஈடு­பட்­டது.
பரம ரக­சியம் பட்ஜெட் தயா­ரிப்பு பணிகள், மிகவும் ரக­சி­ய­மாக மேற்­கொள்­ளப்­படும். கசிவை தடுக்க கண்­கா­ணிப்பு கேம­ராக்கள் பொருத்­தப்­பட்­டுள்­ளன. நிதி அமைச்­சகம் அமைந்­துள்ள, ‘நார்த் பிளாக்’ பகு­தியில், டிசம்பர் மாத வாக்கில் ஊட­கங்கள் அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தில்லை. இந்த பகு­தியின் கீழ் தளத்தில் அமைந்­துள்ள, அச்­ச­கத்தில் பட்ஜெட் ஆவ­ணங்கள் அச்­ச­டிக்­கப்­படும். ஒரு வார காலத்­திற்கு முன், பட்ஜெட் தயா­ரிப்பில் ஈடு­பட்­டுள்ள அதி­கா­ரி­களின் வெளி உலக தொடர்பு துண்­டிக்­கப்­படும். இரண்டு நாட்­க­ளுக்கு முன், பி.ஐ.பி., அதி­கா­ரிகள் பட்ஜெட் செய்தி அறிக்­கை­களை தயா­ரிப்பர். நிதி அமைச்சர் பட்­ஜெட்டை தாக்கல் செய்யும் வரை, அவர்கள் தங்கள் இடத்­தி­லேயே இருக்க வேண்டும்.
பட்ஜெட் அக­ராதிஜி.டி.பி.: மத்­திய புள்­ளி­யியல் துறை கணக்­கின்­படி, இந்­திய பொரு­ளா­தா­ரத்தின், அனைத்து துறை­களின் உற்­பத்­தியின் மொத்தம். நிதி பற்­றாக்­குறை; ஆண்­டு­தோறும், தன் வருவாய் மற்றும் செல­வு­க­ளுக்கு இடை­யி­லான இடை­வெ­ளியை ஈடு­செய்ய, அரசு வாங்கும் கூடுதல் மொத்த கடன்.மூல­தன செல­வுகள்; எந்த சொத்­தையும் உரு­வாக்­காத செல­வுகள் வருவாய் செல­வு கள் ஆகும். நெடுஞ்­சாலை, கட்­ட­டங்கள், அணைக்­கட்­டுகள் போன்­ற­வற்­றுக்­கான செல­வுகள் மூல­தன செல­வுகள். வரி வருவாய்; அர­சுக்­கான பிர­தான வருவாய் ஆதாரம். நேரடி வரி விதிப்பு, பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான வரி விதிப்பு மூலம், அரசு தன் செல­வு­க­ளுக்­கான நிதியை பெறு­கி­றது.மானி­யங்கள்: வருவாய் ஏற்­றத்­தாழ்வை போக்க, அரசு அளிக்கும் பொரு­ளா­தார பலன்கள்.

ஆலோ­சனைபட்­ஜெட்­டிற்கு முன்­பாக, தொழில் துறை அமைப்­புகள், பொரு­ளா­தார வல்­லு­னர்கள், தொழிற்­சங்­கங்கள், மாநில நிதி அமைச்­ச­கங்கள் உள்­ளிட்ட அமைப்­பு­க­ளுடன் ஆலோ­சனை நடை­பெ­று­வது வழக்கம். இந்த ஆலோ­ச­னை­களும், வழக்­க­மாக நடை­பெறும், டிசம்பர் மாதத்­திற்கு ஒரு மாதம் முன்­ன­தாக, நவம்பர் மாதமே துவங்­கின. பிர­தமர் அலு­வ­லக கலந்­தா­லோ­ச­னை­யுடன் பட்ஜெட் தயா­ரிப்பு மேற்­கொள்­ளப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)