பதிவு செய்த நாள்
01 பிப்2017
12:28

புதுடில்லி: முதன்முறையாக பொது பட்ஜெட் உடன் ரயில்வே பட்ஜெட்டும் இன்று தாக்கல் செய்யப்பட்டது. ரயில்வே துறையில் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, அதில் எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதை பற்றி இங்கு பார்ப்போம்...
7 ஆயிரம் ரயில் நிலையங்களில் சூரிய மின்வசதி. 3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை. ரூ.1 லட்சம் கோடியில் ரயில் பாதுகாப்பு நிதி உருவாக்கம். வழிபாட்டுதலங்கள், சுற்றுலா தலங்களுக்கு தனி ரயில்கள். 9 மாநிலங்களுடன் இணைந்து 70 புதிய ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்படும். 3,500 கி.மீ., தூரத்துக்கு புதிய ரயில் பாதை. வேலைவாய்ப்பை உருவாக்க புதிய மெட்ரோ கொள்கை. 500 ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு லிப்ட், எஸ்கலேட்டர் வசதி. ஆன்லைன் ரயில் டிக்கெட் பதிவுக்கு சேவை வரி இல்லை. 2019க்குள் அனைத்து ரயில் பெட்டிகளிலும் பயோ கழிப்பறைகள். தனியார் பங்களிப்புடன் மெட்ரோ ரயில் திட்டங்கள் நிறைவேற்றப்படும். 2020 க்குள் ஆளில்லா ரயில்வே கேட்கள் ஒழிக்கப்படும்.
இவ்வாறு அருண் ஜெட்லி தெரிவித்திருக்கிறார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|