பதிவு செய்த நாள்
01 பிப்2017
12:57

புதுடில்லி : மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி 2017-18-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார். கூடவே இந்த பட்ஜெட்டில் ரயில்வே பட்ஜெட்டும் சேர்த்து ஒரே பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. எந்த துறைக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பதன் விபரம் கீழ் வருமாறு...
* 1 கோடி புதிய வீடுகள் - ரூ.23 ஆயிரம் கோடி ஒதுக்கீடு* விவசாயக்கடன் இலக்கு - ரூ.10 லட்சம் கோடி* ராணுவம் - ரூ.2.74 லட்சம் கோடி ஒதுக்கீடு, இதில் ரூ.86 ஆயிரம் கோடி ராணுவ முதலீடு.* வர்த்தக உள்கட்டமைப்பு - ரூ.3.96 லட்சம் கோடி ஒதுக்கீடு* அதிநவீன வேகமான இணையசேவை - ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு* தேசிய நெடுஞ்சாலை துறை - ரூ.64 ஆயிரம் கோடி* ஊரக மற்றும் விவசாய துறைக்கு ரூ.1.87 லட்சம் கோடி ஒதுக்கீடு* ரயில்வே பாதுகாப்பு - ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கீடு* பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - ரூ.52,393 கோடி ஒதுக்கீடு* பிரதமரின் வீடு கட்டும் திட்டத்திற்கு ரூ.13,000 கோடி ஒதுக்கீடு* குழந்தைகள் திட்டங்களுக்கு ரூ.1.84 லட்சம் கோடி ஒதுக்கீடு* கரும்பு நிலுவை தொகை வழங்க ரூ.9,000 கோடி ஒதுக்கீடு* கிராமப்புற கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1,17,000 கோடி ஒதுக்கீடு* பால்பொருள் பதப்படுத்தும் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.8000 கோடி ஒதுக்கீடு* மகாத்மா காந்தி ஊரக வளர்ச்சி திட்டத்திற்கு ரூ.48,000 கோடி ஒதுக்கீடு* ஊரக தேசிய வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு ரூ.48 ஆயிரம் கோடி ஒதுக்கீடு
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|