பதிவு செய்த நாள்
09 பிப்2017
00:50

புதுடில்லி : உரத்தொழிலில் முன்னணியில் இருக்கும், இப்கோ நிறுவனம், பேங்க் ஆப் பரோடாவுடன் இணைந்து, விவசாயிகளுக்காக தனியான, டெபிட் கார்டுகளை வழங்க இருக்கிறது.
கிராமப்புற விவசாயிகளும், ரொக்கமில்லா பண பரிவர்த்தனை முறைக்கு மாறுவதற்கு வசதியாக, இத்திட்டம் துவங்கப்படுகிறது. இதற்காக, இப்கோ என அழைக்கப்படும், இண்டியன் பார்மர்ஸ் பெர்டிலைசர் கோஆப்பரேட்டிவ் லிமிடெட், பேங்க் ஆப் பரோடாவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.இதன் மூலம், இப்கோ நிறுவனத்தின் தயாரிப்புகளை குறைந்த வட்டியில் கடனாகவும் வாங்க முடியும்.
இது குறித்து இப்கோ அறிவித்துள்ளதாவது:பேங்க் ஆப் பரோடா, ஆதார் அடிப்படையிலான கணக்கை விவசாயிகளுக்கு ஏற்படுத்தி, டெபிட் கார்டுகளை வழங்கும். இந்த கார்டுகள் மூலமாக, ஒவ்வொரு விவசாயியும் இப்கோ தயாரிப்புகளை வாங்க வசதியாக, 2,500 ரூபாய் அளவுக்கு அதிக பற்று வைத்துக்கொள்ளவும் வசதி செய்து தரப்படும். மேலும் விவசாயிகள் அந்த கடனை செலுத்த, ஒரு மாத கால அவகாசமும் தரப்படும்.இதன் மூலமாக விவசாயிகளுக்கு ஒரு மாத கால அவகாசத்துடன் கூடிய கடன் கிடைப்பதோடு, அவர்கள் ரொக்கமில்லா பணப் பரிவர்த்தனைக்கும் எளிதில் மாற முடியும். இப்கோ பரித்துரைக்கும், 2 லட்சம் விவசாயிகளுக்கு கோ பிராண்டட் டெபிட் கார்டுகளை, பேங்க் ஆப் பரோடா வழங்கும். முதற்கட்டமாக உத்தர பிரதேசம், பீஹார், ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநில விவசாயிகளுக்கு இவ்வசதி அளிக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|