‘குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் வளர  பாது­காப்பு துறை கைகொ­டுக்கும்’‘குறு, சிறு, நடுத்­தர நிறு­வ­னங்கள் வளர பாது­காப்பு துறை கைகொ­டுக்கும்’ ... ஐபோன் 8-ல் கட்டாயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெறும் ஐபோன் 8-ல் கட்டாயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெறும் ...
‘அம்­பா­சடர்’ கார் பிராண்டு உரிமை பிரான்ஸ் நிறு­வ­னம் வாங்கியது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2017
02:48

புது­டில்லி : ‘இந்­தி­யாவின் அடை­யாள வாகனம்’ என்ற சிறப்­புடன் திகழ்ந்து வந்த, ‘அம்­பா­சடர்’ காரின் பிராண்டு உரி­மையை, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த, பியூ­ஜியாட் எஸ்.ஏ., குழுமம், 80 கோடி ரூபாய்க்கு வாங்­கி­யுள்­ளது.
சி.கே.பிர்லா குழு­மத்தைச் சேர்ந்த, இந்­துஸ்தான் மோட்டார்ஸ் இந்­தியா நிறு­வ­னத்­திற்கு, கோல்­கட்­டாவின், உட்­ட­பரா நகரில், கார் தயா­ரிப்பு தொழிற்­சாலை உள்­ளது.
இங்கு, 1958ல், முதன்­மு­த­லாக, அம்­பா­சடர் கார் தயா­ரிக்­கப்­பட்­டது. உள்­நாட்டில் தயா­ரிக்­கப்­பட்ட முதல் கார் என்ற சிறப்­புடன், அனைத்து மாநில அரசு துறை­களின் பயன்­பாட்­டிற்­கான, அதி­கா­ர­பூர்வ கார் என்ற பெரு­மை­யையும், அம்­பா­சடர் பெற்­றது.
இந்­நி­லையில், மத்­திய அரசின், மாருதி உத்யோக் நிறு­வனம், ஜப்­பானின் சுசூகி நிறு­வ­னத்­துடன் இணைந்து, 1983ல், ‘மாருதி’ கார்­களை அறி­மு­கப்ப­டுத்­தி­யது. குறைந்த விலை, சிக்­க­ன­மான எரி­பொருள் செலவு போன்­ற­வற்றால், மாரு­திக்கு மவுசு பெரு­கி­யது.
இதை­ய­டுத்து, 1991ல், அறி­மு­க­மான தாரா­ள­ம­ய­மாக்கல் கொள்­கையால், இந்­தி­யாவில், பன்­னாட்டு கார்­களின் வரவு அதி­க­ரித்­தது.
இத்­த­கைய போட்­டி­களை சமா­ளிக்க முடி­யாமல், அம்­பா­சடர் கார் விற்­பனை சரி­வ­டையத் துவங்­கி­யது. அதனால், சந்­தையை தக்க வைத்துக் கொள்ள, அம்­பா­சடர் கார் வடிவம் மேம்­ப­டுத்­தப்­பட்டு, நவீன மய­மாக்­கப்­பட்­டது.
இருந்த போதிலும், கடு­மை­யான போட்­டியை எதிர்­கொள்ள முடி­யாமல், 2014ல், அம்­பா­சடர் கார் தயா­ரிப்பு நிறுத்­தப்­பட்­டது. தற்­போது, இந்த கார் தயா­ரிப்பு, பிராண்டு உரிமம் ஆகி­ய­வற்றை, பிரான்சின், பியூ­ஜியாட் எஸ்.ஏ., குழுமம் வாங்­கி­யுள்­ளது.
இக்­கு­ழுமம், சி.கே.பிர்லா குழு­மத்­துடன் இணைந்து, தமி­ழ­கத்தில், 700 கோடி ரூபாய் முத­லீட்டில், கார் மற்றும் இன்ஜின் தயா­ரிப்பில் ஈடு­பட உள்­ளது; இதற்­கான ஒப்­பந்தம், கடந்த மாதம் கையெ­ழுத்­தாகி உள்­ளது.
இதன்­படி அமைய உள்ள, கூட்டு நிறு­வ­னத்தின் தொழிற்­சா­லையில், ஆண்­டுக்கு, 1 லட்சம் கார்கள் தயா­ரிக்­கவும், இன்­ஜின்­களை, உள்­நாடு மற்றும் வெளி­நா­டு­களில் விற்­பனை செய்­யவும் திட்­ட­மி­டப்­பட்டு உள்­ளது.

பியூ­ஜி­யாட்டின் விடா­மு­யற்சிபியூ­ஜியாட் எஸ்.ஏ., குழுமம், ‘பியூ­ஜியாட், சிட்ரன், டி.எஸ்.,’ என்ற மூன்று பிராண்­டு­களில், நவீன கார்­களை விற்­பனை செய்து வரு­கி­றது. இக்­கு­ழுமம், பிரீ­மியர் ஆட்டோ மொபைல்ஸ் நிறு­வ­னத்­துடன் இணைந்து, 1995ல், முதன்­மு­த­லாக, இந்­தி­யாவில், ‘பியூ­ஜியாட் – 309’ கார் விற்­ப­னையை துவக்­கி­யது.
அதன்பின், 2001ல், கூட்டு நிறு­வ­னத்தில் இருந்து வெளி­யே­றி­யது. 2011ல், மீண்டும், இந்­தி­யாவில் கால் பதிக்கப் போவ­தாக அறி­வித்­தது. இது தொடர்­பாக, தமி­ழகம், குஜராத், ஆந்­திரா ஆகிய மாநில அர­சு­க­ளுடன், நிலம் ஒதுக்­கீடு தொடர்­பாக பேச்சு நடத்­தி­யது. எனினும், இத்­திட்டம் கைக்­கூ­ட­வில்லை. தற்­போது, மூன்­றா­வது முயற்­சி­யாக, இந்­துஸ்தான் மோட்டார்ஸ் நிறு­வ­னத்­துடன் இணைந்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)