‘அம்­பா­சடர்’ கார் பிராண்டு உரிமை பிரான்ஸ் நிறு­வ­னம் வாங்கியது‘அம்­பா­சடர்’ கார் பிராண்டு உரிமை பிரான்ஸ் நிறு­வ­னம் வாங்கியது ... விலை குறையும் பொரிகடலை விலை குறையும் பொரிகடலை ...
ஐபோன் 8-ல் கட்டாயம் வயர்லெஸ் சார்ஜிங் வசதி இடம்பெறும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 பிப்
2017
16:02

பீஜிங் : ஆப்பிள் ஐபோன் 8-ல் வயர்லெஸ் சார்ஜிங் வசதி நிச்சயம் வழங்கப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்படும் அம்சங்களை பார்ப்போம்.ஆப்பிள் நிறுவனம் 2017-ல் மூன்று ஐபோன்களை வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. முன்னதாக வெளியான பல்வேறு தகவல்களில் இந்த ஸ்மார்ட்போன் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் இந்த ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த கேஜிஐ செக்யூரிட்டீஸ் ஆய்வாளர் மிங்-சி-கியோ வெளியிட்டுள்ள அறிக்கையில் 2017-ல் வெளியாக இருக்கும் மூன்று ஐபோன்களிலும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என கூறப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் 2017 ஐபோனில் ஓஎல்இடி டிஸ்ப்ளே வழங்கப்படும் என கூறப்பட்ட நிலையில் வயர்லெஸ் சார்ஜிங் வசதியும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் வயர்லெஸ் சார்ஜிங் அம்சத்தை வழங்குமா அல்லது ஆப்பிள் நிறுவனம் தனக்கென புதிய தரத்தை உருவாக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. வழக்கமான ஆப்பிள் வழிமுறையை வைத்து பார்க்கும் போது ஆப்பிள் புதிய தரத்திலான வயர்லெஸ் சார்ஜிங் வழிமுறைகளை உருவாக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆப்பிள் வெளியிட இருக்கும் மூன்று ஐபோன்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஐபோன் 7 மற்றும் ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போன்களின் மேம்படுத்தப்பட்ட மாடலாக இருக்கும் என்றும் இதில் ஒன்று ஐபோன் எக்ஸ் என அழைக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.புதிய வகை டிஸ்ப்ளே தொழில்நுட்பம் ஐபோன் எக்ஸ்-ல் மட்டுமே வழங்கப்படும் என்றும் இது சமீபத்திய கேலக்ஸி போன்களில் வழங்கப்பட்டதை போன்றே ' பிங்சிடு பிளக்ஸ்(fixed flex)' திரையை பயன்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது. இத்துடன் டச் ஐடி சென்சாரில் சினாப்டிக்-ன் ஆப்டிக்கல் சார்ந்த கைரேகை ஸ்கேனர் வழங்கப்படலாம் என்றும் கூறப்படுகின்றது. ஐபோன் எக்ஸ்-ல் வழங்கப்படும் செல்லுலார் மோடம்களை இன்டெல் மற்றும் குவால்காம் நிறுவனம் தயாரிக்கும் என கூறப்படுகின்றது. இந்த தொழில்நுட்பத்தின்மூலம் லேசர் சென்சார், இன்ஃப்ரா ரெட் சென்சார், வயர்லெஸ் சார்ஜிங் மற்றும் செல்ஃபி கேமரா வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)