பதிவு செய்த நாள்
16 பிப்2017
06:02
மும்பை : ரெப்கோ ஹோம் பைனான்ஸ், நடப்பு நிதியாண்டில், 2016 டிச., மாதத்துடன் முடிவடைந்த ஒன்பது மாதங்களில், 131.70 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டிஉள்ளது.
இது, முந்தைய ஆண்டின் இதே காலத்தில், 107.90 கோடி ரூபாயாக இருந்தது. இதே காலத்தில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 641 கோடி ரூபாயில் இருந்து, 770.70 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த, டிச., மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், ரெப்கோ ஹோம் பைனான்ஸ், 46.40 கோடி ரூபாயை, நிகர லாபமாக ஈட்டியுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இதே காலாண்டில், 38.60 கோடி ரூபாயாக குறைந்து இருந்தது.
இதே காலாண்டுகளில், அந்நிறுவனத்தின் மொத்த செயல்பாட்டு வருவாய், 225.40 கோடி ரூபாயில் இருந்து, 264.20 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. கடந்த காலாண்டில், அந்நிறுவனம், ஒதுக்கீடு செய்த கடன்களின் அளவு, 453.70 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|