பதிவு செய்த நாள்
17 பிப்2017
04:45
புதுடில்லி: இந்தியாவின் ஏற்றுமதி, கடந்த ஜன., மாதத்தில், 2,211 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தை விட, 4.32 சதவீதம் அதிகமாகும். இதே மாதத்தில், இறக்குமதி, 3,195 கோடி டாலராக இருந்தது. மதிப்பீட்டு காலத்தில், பெட்ரோலியம் பொருட்கள், பொறியியல் சாதனங்கள், இரும்புத்தாது உள்ளிட்ட பொருட்களின் ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இதையடுத்து, வர்த்தக பற்றாக்குறை, 984 கோடி டாலர் என்றளவில் உள்ளது.
கடந்த மாதத்தில், தங்கம் இறக்குமதி, 204 கோடி டாலராக குறைந்து இருந்தது. இது, முந்தைய ஆண்டின், இதே மாதத்தில், 291 கோடி டாலராக அதிகரித்து இருந்தது. மத்திய அரசின் செல்லாத நோட்டு அறிவிப்பால், தங்கம் இறக்குமதி குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், ஏப்., – ஜன., வரையிலான காலத்தில், நாட்டின் ஏற்றுமதி, 22 ஆயிரத்து, 92 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இது, முந்தைய ஆண்டின், இதே காலத்தை விட, 1 சதவீதம் அதிகம். இதே காலத்தில், வர்த்தக பற்றாக்குறை, 8,638 கோடி டாலர் என்றளவில் உள்ளது. இந்தியாவில், அமெரிக்க நாட்டிற்கான ஏற்றுமதி, 2.63 சதவீதம்; ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள், 5.47 சதவீதம்; ஜப்பான், 13.43 சதவீதம் என்றளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|