பதிவு செய்த நாள்
26 பிப்2017
01:21

புதுடில்லி : மொபைல் போனில், குறுஞ்செய்திகள், படங்கள், குரல் வழிச் சேவைகள் ஆகியவற்றை, ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் வழங்கி வருகிறது. இதன் நிறுவனருள் ஒருவரான, பிரியன் ஆக் ஷன், மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்தை சந்தித்து பேசினார். இதையடுத்து, பிரியன் ஆக் ஷன்,செய்தியாளர்களிடம் பேசியதாவது:இந்தியாவின் மின்னணு வர்த்தகத்திற்கு, வாட்ஸ் ஆப், எத்தகைய பங்களிப்பை வழங்கலாம் என்பது குறித்து, அமைச்சரின் கருத்தை கேட்டறிந்தேன். இந்தியா, எங்களுக்கு மிக முக்கியமான நாடாக விளங்குகிறது. இங்கு, 20 கோடி பேர், வாட்ஸ் ஆப் பயன்படுத்துகின்றனர். மேலும் அதிகமானோரை ஈர்க்க, இந்தியாவில் தொடர்ந்து முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளோம். இதன் மூலம், மத்திய அரசின், ‘டிஜிட்டல் இந்தியா’ திட்டத்திற்கு, வாட்ஸ் ஆப் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்க முடியும். தற்போது, குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் சமூகத்தினரை இணைக்கும் சேவையில் ஈடுபட்டு வரும் வாட்ஸ் ஆப், விரைவில், வணிக ரீதியிலான தகவல் பரிவர்த்தனை சேவைகளை துவக்க உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|