பதிவு செய்த நாள்
27 பிப்2017
00:00

பள்ளிகள் கணிதம், அறிவியல் பாடங்களை கற்றுத்தருவது போலவே, பணத்தை எப்படி சிறந்த முறையில் நிர்வகிப்பது என, கற்றுத்தர வேண்டும் என்று கூறுகிறார், தனிநபர் நிதி எழுத்தாளரான கேரி செய்கல். அவர், நிதி வாழ்க்கையை சிறந்த முறையில் நிர்வகிக்க தேவையான, 99 அடிப்படை வழிகளை முன்வைக்கிறார். பள்ளிகளில் கற்றுத்தராத விஷயங்கள் எனும் பொருள் தரும் வகையில், ‘ஒய் டிடிண்ட் தே டீச் மீ திஸ் இன் ஸ்கூல்’ புத்தகத்தில் இந்த வழிகளை விவரிக்கிறார். அவற்றில் சில:
முதல் விஷயம், நிதி நோக்கில் சரியான நபரை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இதன் பொருள், நிதி விஷயங்களில் மேதையை தேட வேண்டும் என்றில்லை. நல்ல நிதி பழக்கங்கள் உள்ள ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதாகும். திருமணத்திற்கு முன், பலரும் அதிகப்படியாக செலவு செய்தேனும், வாழ்க்கைத் துணையாக வர இருப்பவரை கவர முற்படுகின்றனர். ஆனால், திருமணத்திற்கு பின், இப்படி செலவு செய்வது சாத்தியம் இல்லாமல் போகலாம்.
இருவரும் பணக் கொள்கை பற்றி பேசுங்கள். நீங்கள் சேமிப்பவரா... செலவு பழக்கம் கொண்டவரா... கடன் பற்றி உங்கள் கருத்து என்ன? என்றெல்லாம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். நல்ல நிதிப்பழக்கம் கொண்டவரை மணந்து கொண்ட பின்னர், பரஸ்பரம் பணக் கொள்கையை கடைபிடிப்பதை உறுதி செய்யுங்கள். நிதி விஷயங்கள் தொடர்பாக, திறந்த மனதுடன் விவாதியுங்கள். இந்த விவாதம் தொடர்ச்சியானதாக இருக்க வேண்டும்.
பிள்ளைகளை வளர்ப்பது செலவு மிக்கது என்பதை அறிந்திருங்கள். அதற்கேற்ப திட்டமிட்டு கொள்வது நல்லது. குழந்தைகள் இருக்கும் போது, நீங்கள் சுயநலமாக நடந்து கொள்ள முடியாது. அவர்களுக்கான நீண்டகால நோக்கில் செய்ய வேண்டிய கடமைகளை மனதில் கொள்ள வேண்டும்.எல்லாருக்குமே எல்லாமே இப்போதே தேவைப்படுகிறது. ஆனால், வருமானத்திற்குள் செலவு செய்ய பழக வேண்டும். அப்போது தான், சேமிக்கவும், முதலீடு செய்யவும் பணம் இருக்கும். எனவே, எந்த ஒரு பொருளையும் அதை, எப்போது உங்களால் வாங்க முடியுமோ அதுவரை காத்திருக்கவும்.
உங்களால் வாங்க முடியாத பொருட்களை வாங்கும் பழக்கம் இருந்தால், செலவுகள் அதிகரித்து நிதி பாதுகாப்பு பாதிக்கப்படும். வரவுக்குள் செலவு செய்து வாழ்வது என்பது மோசமாக வாழ்வதாக அர்த்தம் இல்லை. அது புத்திசாலித்தனமாக வாழ்வதாகும்.உங்களிடம் இருக்கும் பொருட்களை முறையாக பராமரிப்பதில் கவனம் செலுத்துங்கள். இவ்வாறு கவனம் செலுத்தும் போது, உங்களிடம் உள்ள பொருட்கள் நீண்டகாலம் உழைக்கக் கூடியதாக இருக்கும். உங்களுடைய நட்பு வட்டத்தை பெருக்கி கொள்ளுங்கள்.
நண்பர்களிடம் இருந்து நல்லவிதமான நிதி ஆலோசனைகள் கிடைக்கலாம். உங்கள் வேலையில் இருந்து, உங்களுக்கு அதிகம் கிடைக்க வாய்ப்புள்ளதை புரிந்து கொள்ளுங்கள். அது அனுபவமாகவும், கற்றலாகவும் இருக்கலாம். எனவே, நிறுவனம் உங்களை பயன்படுத்திக்கொள்கிறது என, நினைக்காமல் ஆர்வத்துடன் பணியாற்றுங்கள்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|