பதிவு செய்த நாள்
27 பிப்2017
00:01

ஏழாவது கட்டமாக தங்க சேமிப்பு பத்திரங்கள் வெளியிடப்படுகின்றன. இவற்றில் இன்று முதல் (பிப்., 27) மார்ச், 3 வரை முதலீடு செய்யலாம்.
தங்க இறக்குமதியை குறைக்கும் நோக்கத்தில் தங்க சேமிப்பு பத்திரங்கள் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம், பவுதீக வடிவில் அல்லாமல் பத்திர வடிவில் தங்கத்தில் முதலீடு செய்யலாம். அரசு சார்பில் ரிசர்வ் வங்கி இந்த பத்திரங்களை வெளியிடுகிறது. இதுவரை ஆறு கட்டங்களில் இவை வெளியிடப்பட்டுள்ளன. இப்போது, ஏழாவது கட்டமாக, பிப்., 27 முதல் மார்ச், 3ம் தேதி வரை வெளியிடப்பட உள்ளன.
விண்ணப்பித்தவர்களில் தகுதி உள்ளவர்களுக்கு மார்ச், 17ல் பத்திரம் வழங்கப்படும்.ஒரு கிராம் முதல், 500 கிராம் வரை பல்வேறு மதிப்புகளில் வாங்கலாம். இதன் முதிர்வு காலம், 8 ஆண்டுகள். முதிர்வடையும் போது, அப்போதைய தங்க விலை அடிப்படையில் பணம் அளிக்கப்படும். 5 ஆண்டுகளுக்கு பின், யூனிட்களை விற்று வெளியேறும் வாய்ப்புள்ளது. முதலீடு காலத்தில் 2.50 சதவீத வட்டி அளிக்கப்படும்.
வங்கிகள், அஞ்சல் அலுவலகங்கள், ஸ்டாக் ஹோல்டிங் நிறுவனம் உள்ளிட்டவை மூலம், வாங்கலாம். டிமெட் மற்றும் காகித வடிவில் பெற்றுக்கொள்ளும் வசதி அளிக்கப்படுகிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|