பதிவு செய்த நாள்
09 மார்2017
23:59

மும்பை : ‘மந்த கதியில் உள்ள இந்திய நுகர்பொருள் துறை, அடுத்த, 2 – 3 ஆண்டுகளில், 15 சதவீதத்திற்கும் அதிகமாக வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது’ என, சி.ஐ.ஐ., – பெய்ன் அண்ட் கம்பெனி இணைந்து வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
அதன் விபரம்: கடந்த மூன்று ஆண்டு களாக, சோப்பு, டிடெர்ஜென்ட், ஷாம்பூ போன்றவற்றை உள்ளடக்கிய, நுகர்பொருள் துறையின் வளர்ச்சி மந்தமாக உள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையிலான, நுகர்பொருள் துறையின் வளர்ச்சி, 1.2 சதவீதத்தில் இருந்து, 0.8 சதவீதமாக குறைந்துள்ளது.
சுணக்கம்இதற்கு, நுகர்வோரின் செலவழிப்பு வருவாயில் ஏற்பட்ட மாற்றம் காரணமா அல்லது மக்கள், நுகர்பொருள் சாரா பொருட்களுக்கு அதிகம் செலவழிக்கத் துவங்கியுள்ளதால், இந்த சுணக்கம் உண்டானதா என, தெரியவில்லை. இத்தகைய சூழல் காரணமாக, நுகர்பொருள் நிறுவனங்கள், வளர்ச்சிக்கான முதலீடுகளை குறைத்துக் கொண்டன. அவை, லாபத்தை தக்க வைத்துக் கொள்ளும் நோக்குடன் செயல்பட்டு வருகின்றன. அதன் விளைவாக, 2016ல், முந்தைய இரு ஆண்டுகளில் இல்லாத வகையில், நுகர்பொருள் துறையின் வளர்ச்சி இருந்தது. இத்துறையின், 22 பிரிவுகளில், 18 பிரிவுகளில் வளர்ச்சி காணப்பட்டது. ஒட்டுமொத்த அளவில், அக்டோபர் வரை, 9 சதவீத வளர்ச்சியை, இத்துறை கண்டது.
குறிப்பாக, நகரங்களை விட, 1.7 மடங்கு வளர்ச்சி, கிராமப்புற வணிகத்தில் கிடைத்தது. இதற்கு, பற்பசை, கேச பராமரிப்பு எண்ணெய் ஆகிய இரு பிரிவுகளில், அளவு அடிப்படையிலான விற்பனை வளர்ச்சி, குறிப்பிடத்தக்க பங்கை வழங்கிஉள்ளது. நகர்ப்புறங்களில், நொறுக்குத் தீனி உள்ளிட்ட உணவுப் பொருட்கள் பிரிவு, 10 சதவீத வளர்ச்சியை கண்டுள்ளது. சிறிய நகரங்கள் மற்றும் கிராமப்புற மக்களின் ஆதரவால், வீட்டு பராமரிப்பு பொருட்கள் பிரிவின் வளர்ச்சி, 9 சதவீதமாக உள்ளது.
ஆற்றல்நுகர்பொருள் நிறுவனங்கள், அவற்றின், ‘பிராண்டு’ பொருட்களுக்கான சந்தையை விரிவு படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், அடுத்த, 5 – 10 ஆண்டுகளில், ஒட்டு மொத்த நுகர்பொருள் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். அடுத்த மூன்று ஆண்டுகளில், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம், குறைந்தபட்சம், 12 சதவீதமாக இருந்தால் கூட, நுகர்பொருள் துறையின் வளர்ச்சி, 15 சதவீதத்திற்கும் அதிகமாக உயரும். இத்துறைக்கு, அதற்கான ஆற்றல் உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|