அந்தமானில் தொழில் துவங்க வாருங்கள்! அரசியல்வாதிகளுக்கு கமிஷன் தர தேவையில்லைஅந்தமானில் தொழில் துவங்க வாருங்கள்! அரசியல்வாதிகளுக்கு கமிஷன் தர ... ... ரொக்கமில்லா பரிவர்த்தனை; தேர்தல் ஆணையம் பரிந்துரை ரொக்கமில்லா பரிவர்த்தனை; தேர்தல் ஆணையம் பரிந்துரை ...
புதிய ஜி.எஸ்.டி., திட்டத்தில்... 240 தொழிற்சாலைகள் மூடப்படும் அபாயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 மார்
2017
23:46

புதுடில்லி : அம­லுக்கு வர உள்ள, புதிய, ஜி.எஸ்.டி., திட்­டத்­தில், குறைந்த விலை குளு­கோஸ் பிஸ்­கட்­டுக்கு, 12 சத­வீ­தம் வரி விதிக்­கப்­பட உள்­ள­தால், இத்­து­றை­யில், 240 தொழிற்­சா­லை­கள் மூடப்­படும் அபா­யம் உள்­ள­தாக, பிஸ்­கட் தயா­ரிப்பு நிறு­வ­னங்­கள் அச்­சம் தெரி­வித்து உள்ளன.
நாடு முழு­வ­தும், ஒரே வரி விதிப்பு முறைக்­கான, ஜி.எஸ்.டி., எனப்­படும், சரக்கு மற்­றும் சேவை வரி திட்­டத்தை, ஜூலை, 1 முதல் அமல்­ப­டுத்த, மத்­திய அரசு தீவிர முயற்சி மேற்­கொண்டு உள்­ளது. ஜி.எஸ்.டி.,யில், அனைத்து வகை பிஸ்­கட்­டு­களும், 12 சத­வீத வரி விதிப்­பின் கீழ் கொண்டு வரப்­பட்­டுள்ளன. இத­னால், மத்­திய உற்­பத்தி வரி விதிப்­பில் விலக்கு பெற்று, குறைந்த விலை­யில் பிஸ்­கட் தயா­ரித்து வரும் நிறு­வ­னங்­களும், ஜி.எஸ்.டி.,யில், 12 சத­வீத வரி செலுத்த நேரி­டும்.
‘‘இது, குறைந்த விலை­யில் குளு­கோஸ் பிஸ்­கட்­டு­களை தயா­ரித்து, விற்­பனை செய்து வரும் நிறு­வ­னங்­களை கடு­மை­யாக பாதிக்­கும்,’’ என, பிஸ்­கட் தயா­ரிப்­பா­ளர்­கள் நலச்­சங்­கத்­தின் துணைத் தலை­வர் மயாங்க் ஷா தெரி­வித்து உள்­ளார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: இந்­தி­யா­வில், 1 கிலோ பிஸ்­கட், 70 ரூபாய் முதல், 700 ரூபாய் வரை விற்­கப்­ப­டு­கிறது.கிலோ, 100 ரூபாய்க்கு கீழ் உள்­ளவை, குறைந்த விலை பிஸ்­கட் பிரி­வின் கீழ் வரு­கின்றன; இவை, நாட்­டில் விற்­ப­னை­யா­கும் மொத்த பிஸ்­கட்­டு­களில், 40 சத­வீத பங்­க­ளிப்பை கொண்­டுள்ளன. இப்­பி­ரி­விற்கு, மத்­திய உற்­பத்தி வரி­யில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்டு உள்­ளது. ஜி.எஸ்.டி., வரை­வ­றிக்­கை­யில், அனைத்து பிஸ்­கட்­டு­க­ளுக்­கும், 12 சத­வீத வரி விதிக்­கப்­படும் என, தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது; இது, நடை­மு­றைக்கு வந்­தால், குறைந்த விலை­யில் குளு­கோஸ் பிஸ்­கட்­டு­களை தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­கள் பாதிக்­கப்­படும்.
கடந்த, 1996ல், 1 கிலோ குளு­கோஸ் பிஸ்­கட், 40 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. இது, 20 ஆண்­டு­கள் கழிந்த நிலை­யில், தற்­போது, 70 ரூபாய் என்ற அள­விற்கே அதி­க­ரித்­துள்­ளது. அதே சம­யம், இதே காலத்­தில், பிஸ்­கட் தயா­ரிப்­பிற்­கான மூலப்­பொ­ருட்­கள் செல­வி­னம், 225 சத­வீ­தம் உயர்ந்­துள்­ளது. குறைந்த விலை பிஸ்­கட்­டு­களில், நிறு­வ­னங்­களின் லாப வரம்பு, 2 – 3 சத­வீ­தம் என்ற அள­விற்கே உள்­ளது. இத்­த­கைய சூழ­லில், 12 சத­வீத, ஜி.எஸ்.டி., அம­லா­னால், 240 பிஸ்­கட் தொழிற்­சா­லை­கள் மூடப்­படும்; ஏரா­ள­மா­னோர் வேலை­யி­ழப்­பர்.
பிஸ்­கட் சந்­தை­யில், குறைந்த விலை குளு­கோஸ் பிஸ்­கட்­டு ­களின் பங்­க­ளிப்பு, 20 – 25 சத­வீ­த­மாக குறை­யும். ஆகவே, குறைந்த விலை பிஸ்­கட்­டு­க­ளுக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்­க­ளிக்க வேண்­டும். அதிக மதிப்­புள்ள பிஸ்­கட்­டு­க­ளுக்கு, 18 சத­வீ­தம் வரி விதிக்­க­லாம். இவ்­வாறு அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)