பதிவு செய்த நாள்
17 மார்2017
10:33

மும்பை : கடந்த 3 நாட்களாக சர்வதேச அந்நிய செலாவணி சந்தையில், இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுடனேயே காணப்பட்டது. தொடர்ந்து 4வது நாளாக இன்றும் (மார்ச் 17) ரூபாய் மதிப்பு உயரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக, சர்வதேச சந்தையில் வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்கள் இடையே டாலரின் தேவை அதிகரித்தது. இதனையடுத்து, ரூபாய் மதிப்பு மீண்டும் சரிவை சந்தித்துள்ளது.இன்றைய வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 24 காசுகள் சரிந்து 65.65 ஆக இருந்தது. முன்னதாக நேற்றைய வர்த்தக நேர இறுதியில் ரூபாய் மதிப்பு 65.41 ஆக இருந்தது. இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து உயர்ந்து வந்தாலும், சர்வதேச சந்தையில் இந்திய ரூபாயின் மதிப்பு சரிவை சந்தித்துள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|