தங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.32 உயர்வு ... ரூ.339 க்கு தினமும் 2ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல் புதிய சலுகை ரூ.339 க்கு தினமும் 2ஜிபி டேட்டா : பிஎஸ்என்எல் புதிய சலுகை ...
ஜியோ இலவச சேவைக்கு தடை இல்லை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

17 மார்
2017
13:20

புதுடில்லி : ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது என தொலைதொடர்பு தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ‘4ஜி’ என்னும் நான்காம் தலைமுறை தொலைதொடர்பு சேவையை அறிமுகம் செய்துள்ளது. சிம் கார்டு, அழைப்புகள், இன்டர்நெட் சேவை என எல்லாவற்றையும் அது இலவசமாக வழங்கி வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் வரை வழங்கப்பட்ட இந்த இலவச சேவை, பின்னர் 2017 மார்ச் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
ஜியோவின் இலவச சேவையை 90 நாட்களுக்கு மேல் நீட்டிப்பதற்கு டிராய் அளித்த அனுமதிக்கு எதிராக பார்தி ஏர்டெல் நிறுவனமும், ஐடியா செல்லுலார் நிறுவனமும் ‘டிடிசாட்’ என்றழைக்கப்படுகிற தொலைதொடர்பு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்தன. அதில், ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிப்பதுடன், இது தொடர்பான அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்யுமாறு டிராய்க்கு உத்தரவிட வேண்டும் என்று முறையிடப்பட்டது.
இதுதொடர்பாக பார்தி ஏர்டெல், ஐடியா செல்லுலார், ஜியோ மற்றும் டிராய் தரப்பு கருத்துகளை கேட்டு விட்டு, தீர்ப்பை தொலைதொடர்பு தீர்ப்பாயம் கடந்த வாரம் ஒத்திவைத்தது. இந்நிலையில் ஜியோவின் இலவச சேவைக்கு தடை விதிக்க முடியாது என தொலை தொடர்பு தீர்ப்பாயம் நேற்று தீர்ப்பு அளித்தது. இருப்பினும், இது தொடர்பான பிரச்சினைகளை மறுஆய்வு செய்து, அதன் முடிவை 2 வாரங்களில் தெரிவிக்க வேண்டும் என்று டிராய்க்கு உத்தரவிட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)