‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 சதவீதம் உயரும்‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தை பின்பற்றினால்... நிறுவனங்களின் வருவாய் 27 ... ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.13 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.65.13 ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
நிதி நிர்­வா­கத்­திற்கு வழி­காட்டும் மாய எண்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2017
03:03

தனி நபர்கள் பட்ஜெட் போடா­மலேயே, தங்கள் நிதி வாழ்க்­கையை கட்­டுக்குள் வைத்­தி­ருக்க எளி­தான வழி இருக்­கி­றது என்­கிறார், ஆராம் பயர்ஸ். இதற்கு வழி­காட்டும் வகையில், ‘யுவர் மேஜிக் நம்பர்’ புத்­த­கத்தை எழு­தி­யி­ருக்­கிறார்.பட்ஜெட் எல்லாம் எனக்கு சரி­பட்டு வராது என, நீங்கள் நினைக்­கலாம். பட்ஜெட் சிக்­க­லா­னது, கட்­டுப்­பாடு மிக்­கது. அதற்­கென நேரம் ஒதுக்க வேண்டும். அதை பின்­பற்றி நடப்­பது கடி­ன­மா­னது. ஆனால், இதை­விட எளி­தான வழி இருக்­கி­றது. பட்­ஜெட்­டுக்கு பதில், உங்கள் மாய எண்ணை அறிந்து கொள்­ளுங்கள். மாய எண்ணை தெரிந்து கொள்­வது எளி­தா­னது. அதற்கு முன் ஒரு விஷயம், நீங்கள் பணத்தை எப்­படி செல­விட வேண்டும் என யாரும் சொல்ல மாட்­டார்கள். உங்கள் பணத்தை எப்­படி செல­வி­டு­வது என்­பது உங்கள் விருப்பம்.
இப்­போது தினமும் ஒரு குறிப்­பிட்ட தொகை இஷ்டம் போல செலவு செய்ய உங்­க­ளிடம் இருந்தால் எப்­படி இருக்கும் என கற்­பனை செய்து பாருங்கள். இந்த பணத்தை எப்­படி வேண்­டு­மா­னாலும் செல­வி­டலாம்.இந்த தொகை தான் உங்­க­ளுக்­கான மாய எண். தினமும் விருப்பம் போல செலவு செய்ய உங்­க­ளிடம் உள்ள தொகை. இந்த தொகையை தினந்­தோறும் செல­வி­டலாம். அல்­லது அதை சேர்த்து வைத்து பின்னர் பயன்­ப­டுத்­தலாம். ஆனால், உங்­க­ளுக்­கான மாய எண் என்ன? இதை கண்­ட­றி­வது சுலபம் தான்.
உங்கள் ஆண்டு மொத்த வரு­மா­னத்தை எடுத்­துக் ­கொள்­ளுங்கள். (பிடித்­தங்கள் போக வீட்­டிற்கு கொண்டு வரும் தொகை). மாதந்­தோறும் செய்யும் நிலை­யான செல­வு­களை இதி­லி­ருந்து கழித்து விடுங்கள். மீதி வரும் தொகையை, 365ல் வகுத்தால் கிடைக்கும் தொகையை உங்­க­ளுக்­கான மாய எண். இந்த தொகையை தான், நீங்கள் இஷ்டம் போல செலவு செய்­யலாம்.நிலை­யான செல­வுகள் என்­பது, மின் கட்­டணம் போன்ற மாறக்­கூடிய கட்­ட­ணங்­க­ளையும் கொண்­டது. தவிர்க்க இய­லாத செல­வுகள் என்றும் புரிந்து கொள்­ளலாம்.
அதா­வது ஒவ்­வொரு மாதமும் தொடர்ந்து மேற்­கொள்ளும் செல­வுகள் அனைத்­தையும் இந்த பிரிவில் கொண்டு வர வேண்டும். சேமிப்பு மற்றும் கடன் தவ­ணையும் இதில் அடங்கும். அவ­சர கால நிதிக்­கான தொகை­யையும், இதில் சேர்த்­துக் ­கொள்­வது நல்­லது.கடனை அடைக்க தேவைப்­படும் தொகை­யையும் நிலை­யான செல­வு­க­ளா­கவே கருத வேண்டும். அதுவும் ஒரு தவிர்க்க இய­லாத செலவு தான்.இப்­படி கணக்­கிட்டு உங்கள் மாய எண் தொகையை கண்­ட­றிந்த பின், அதை தினமும் உங்கள் விருப்பம் போல செல­வி­டலாம். மூன்று மாத செலவு கணக்கை திரும்பி பார்த்தால், உங்கள் நிலை­யான செல­வுகள் என்ன என்­பதை அறிந்து கொள்­ளலாம்.
மாய எண் தொகையை ஒரு காகி­தத்தில் எழுதி வைத்­துக் ­கொண்டு தினந்­தோறும் அதை எப்­படி பயன்­ப­டுத்­து­கி­றீர்கள் என்­பதை குறித்து வைப்­பது நல்­லது. இதன் மூலம் செல­வு­களை கண்­கா­ணிக்­கலாம்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)